Videos

திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ மகாசரஸ்வதி அம்மன் ஆலய சரஸ்வதி பூஜை | Saraswathi Poojai 2026

🌺🙏 Koothanur Sri Maha Saraswathi Amman Temple, Tiruvarur Saraswathi Pooja Devotees in Long Queues for Darshan | திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ மகாசரஸ்வதி அம்மன் ஆலய சரஸ்வதி பூஜை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள் 🌺 🌺 🌺 🙏🌺

🙏 தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிதேவிக்கு என தனி ஆலயம் அமையப்பெற்ற திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் ஸ்ரீமகாசரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜையையொட்டி திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று வழிபாடு செய்து வருகின்றனர்.*

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பூந்தோட்டம் அருகே கூத்தனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாசரஸ்வதி அம்மன் ஆலயம் தொன்மை சிறப்புமிக்க ஆலயம். இங்கு தான் சரஸ்வதி தேவிக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது.

தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவியை முதன்மைத் தெய்வமாகக் கொண்டு (மூலவர்) அமைந்துள்ள ஒரே தனித்த ஆலயம் இதுவேயாகும்.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாசரஸ்வதி அம்மன் மீது கவிசக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் கவிபாடி துதித்தது ஆராதனை செய்த ஸ்தலம்.

ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ் புலவருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தர் வழிபட்டதால் இந்த ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றதாக வரலாறு உள்ளது.

இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேனா, பென்சில், நோட்டு புத்தகம், வெள்ளை தாமரை கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டி இந்த அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் இந்த கோவிலில் சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த வருட விழாவை முன்னிட்டு சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்து சரஸ்வதி பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு சிறப்புகளுக்கு உரிய இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகா சரஸ்வதி தேவிக்கு இன்று காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது.

சரஸ்வதி பூஜை விழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

தொன்மை சிறப்புமிக்க கூத்தனூர் ஸ்ரீமகா சரஸ்வதி அம்மனை சரஸ்வதிபூஜை நாளில் வழிபட்டால் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேன்மையடையலாம் என்ற நம்பிக்கையின் பேரில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும்., குறிப்பாக மாணவ மாணவியர்கள்., பலதரப்பு கலைஞர்களும் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்களும் அதிகாலை முதல் வருகைதந்து நீண்டவரிசையில் நின்று மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் சரஸ்வதி அம்மன் மற்றும் பிரதான பிரகாரத்தில் அமைந்துள்ள உற்சவமூர்த்தி ஸ்ரீசரஸ்வதியையும் வழிபட்டு வருகின்றனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் 100க்கும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை வித்யாரம்பம் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது தமிழ் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை குழந்தைகள் நெல்மணிகளில் எழுதும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : கூத்தனூர், திருவாரூர்.
📅 தேதி : 19.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#திருவாரூர் #கூத்தனூர் #மகாசரஸ்வதிஅம்மன் #கூத்தனூர்சரஸ்வதிஅம்மன் #சரஸ்வதிபூஜை #சரஸ்வதிதரிசனம் #நீண்டவரிசை #பக்தர்கள் #அம்மன்வழிபாடு #கல்விக்கடவுள் #சரஸ்வதிதேவி #ஆன்மிகம் #கோவில்விழா #Tiruvarur #Koothanur #MahaSaraswathiAmman #KoothanurSaraswathiTemple #SaraswathiPooja #SaraswathiDarshan #Devotees #TempleDarshan #GoddessSaraswathi #SaraswathiAmman #SaraswathiPooja2026 #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #TempleFestival #Spiritual #DivineDarshan

Related Articles

Back to top button
Close