தஞ்சாவூர் – திருத்தணி ஸ்ரீ குறிச்சி சுப்ரமணிய சுவாமி ஆலயம் 5ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024
தஞ்சாவூர் – திருத்தணி | கீழவாசல் குறிச்சி தெரு | ஸ்ரீ குறிச்சி சுப்ரமணிய சுவாமி ஆலயம் 5ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024 | திருவையாறு
Thanjavur | Tiruttani | Keezavasal Kurichi Street | Sri Kurichi Subramaniya Swamy Temple | 5th Padaiveedu | Kandha Sasti Vizha 2024 | Thiruvaiyaru
தேதி : 06.11.2024
#thiruvaiyaru #Tiruttani #Keezavasal #Kurichi #subramaniyaswamy #5 #kandha_sasti #2024 #திருவையாறு #பழனி #சுப்ரமணியசுவாமி #ஆறுபடைவீடு #கந்தசஷ்டி #2024 #murugan #முருகன் #சுப்பிரமணியசுவாமிகோவில்
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று அறுபடை வீடுகளில் ஐந்தாம் கோவிலான தஞ்சாவூர் திருத்தணி ஸ்ரீ குறிச்சி சுப்ரமணிய சுவாமி ஆலயத்தினை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் மூலவர் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் காட்சியளிக்கின்றார்.
ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. விழாவில் முக்கிய நிகழ்வுகளாக முருகப்பெருமான் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், சூரசம்ஹாரநிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. மேலும் இவ்விழாவின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. மேலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் தினம் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. மேலும் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் காலை திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் விழாவும் மாலை முத்து பல்லக்கில் இறைவன் வீதி உலா காட்சி நடைபெறுகிறது.
இவ்வாலயத்தின் முக்கிய பிரார்த்தனையாக சஷ்டி விழாவின்போது இறைவன் மீது சாற்றப்படும் மூலிகை மருந்தானது தினமும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது, அதை குழந்தை பாக்கியம் பெற வேண்டுவோர் வாங்கி உட்கொள்ள விரைவில் புத்திர பாக்கியம் பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட நிலம் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தினை கந்த சஷ்டி விரத நாளில் வழிபட்டு கந்த கடவுளின் அருளை பெற்று உய்வோமாக! நன்றி வணக்கம்!