Vinayakar Sathurthi Sirappu Abishekam Thiruvannamalai Irattai Vinayagar Temple | #thiruvaiyaru #dharumai_aadheenam
Date: 07-09-2024
விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் திருவண்ணாமலை இரட்டை விநாயகர் கோவில்
#திருவையாறு #தருமைஆதீனம் #தஞ்சாவூர் # பிள்ளையார்பட்டி
#இரட்டை விநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி இரட்டைப் பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள சுயம்பு இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
சதுர்த்தி திதி இன்று மதியம் ஆரம்பித்து நாளை மதியம் வரை உள்ள நிலையில் விநாயகர் கோயில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று காலையில் திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுயம்பு வடிவிலான இரட்டைப் பிள்ளையார் கோவிலில் இரட்டை பிள்ளையார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
அதிகாலையில் கோயிலில் நடை திறக்கப்பட்டு இரட்டை பிள்ளையார்களுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், பன்னீர், இளநீர் ஆகியவற்றினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் இரட்டை பிள்ளையாருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.