Videos

Vinayakar Sathurthi Sirappu Abishekam Thanjavur Pillaiyarpatti Sri Harithra Vinayagar Temple

Vinayakar Sathurthi Sirappu Abishekam Thanjavur Pillaiyarpatti Sri Harithra Vinayagar Temple | #thiruvaiyaru #dharumai_aadheenam

Date: 07-09-2024

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்.
#திருவையாறு #தருமைஆதீனம் #தஞ்சாவூர் # பிள்ளையார்பட்டி
#ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்
இராஜராஜ சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி மங்கள விநாயகர் என்கிற ஹரித்ரா விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 8 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன.

ஏராளமான மக்கள் விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

தஞ்சை அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் மங்கல விநாயகர் என்கிற ஹரித்ரா விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது

ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்ட இந்த ஆலயம் காரைக்குடி பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயத்திற்கு இணையாக போற்றி வழிபட்டு வரப்படுகிறது

ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய போது, ஆலயத்திற்குள் முதன் முதலாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய நினைத்ததாக சொல்லப்படுகிறது

அதற்காக ஒற்றை கல்லினால் 8 அடி உயரம், 8 அடி அகலத்தில் விநாயகர் சிலையை சிற்பக்கூடத்தின் வடிவமைத்து அதனை தஞ்சை பெரிய கோவில் எடுத்து வர முயன்றதாக சொல்லப்படுகிறது

அழகிய வடிவத்தில் பெரிய அளவில் செய்யப்பட்ட விநாயகர் சிலை தஞ்சைக்கு எடுத்து வர முயன்ற போது அந்த சிலையை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என சொல்லப்படுகிறது

இதுகுறித்து சிற்பி மன்னருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது

ராஜராஜ சோழன் உத்தரவின் படி அந்த சிலை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து அந்த ஊருக்கு பிள்ளையார் பட்டி என பெயர் சூட்டி ஆலயம் எழுப்ப உத்தரவிட்டதாக வரலாறு உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க மங்கள விநாயகர் என்கிற ஹரித்ரா விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரவிய பொடி விபூதி மஞ்சள் பொடி இளநீர் பஞ்சாமிர்தம் அரிசி மாவு பொடி பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பலவகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டன

தொடர்ந்து விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன

ஏராளமான மக்கள் விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close