உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் |
Uththiramerur Sri Sunthra Varatharaja Perumal Temple Ciththirai Thiruvizha Theroottam #
உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
அந்த வகையில் பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதைத்தொடர்ந்து, முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஆனந்த ஐயங்கார் தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மாடவீதி, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் புறப்பட்ட இடத்தில் நிலை தேர் நிறுத்தப்பட்டது.
தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீபாராதனைகள் காட்டி வழிபாடு செய்தனர்.
அதேபோல், தேர் திருவிழாவையொட்டி, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.