Videos

Thiruvellarai Sri Pundarikaksha Perumal Temple Therottam | Thiruvaiyaru

#thiruvellarai #therottam #pundarikaksha_perumal #தேரோட்டம் #திருவெள்ளறை #புண்டரீகாட்ச_பெருமாள் #Thiruvaiyaru #thiruvaiyaru #அரசூர் #பாலதண்டாயுதபாணி #பங்குனி_மாத # பால்_குட #திருவிழா #திருவையாறு #dharumai_aadheenam #dharmapuram
திருவெள்ளறை என்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.சோழ நாட்டு நான்காவது திருத்தலம். இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.[1] இங்கு செந்தாமரைக்கணன் (புண்டரீகாக்ஷன்) என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

அமைந்துள்ள இடம்
இக்கோயில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்ததுள்ளது. திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு, திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். இக்கோயில் காண்போரைப் பிரமிக்க வைக்கும். நந்தவனங்கள்,கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின்பகுதியில் பாறையைக் குடைந்து தூண்களுடன் இரு சிறு அறைகள் குகை போலக் காணப்படுகின்றன. ​​

பெருமாள்
புண்டரீகாக்ஷன் – செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். சக்கரம்- ப்ரயோக சக்கரம்.

மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர ஏழு மூலவர்கள் உள்ளனர். மேலே பெருமாளின் வலது பக்கம் சூரியனும் இடது பக்கம் சந்திரனும் பெருமாளுக்கு சாமரம் வீசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழே பெருமாளின் வலது பக்கம் கருட பகவானும் இடது பக்கம் ஆதிசேஷனும் மனித ரூபத்தில் நின்றுக்கொண்டு பெருமாளை சேவித்த படி இருக்கின்றனர். கீழே அமர்ந்தபடி பெருமாளின் வலது பக்கம் மார்க்கண்டேய மஹரிஷி மோட்சத்திற்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார் இடது பக்கம் பூமாதேவி தாயார் உலக நன்மைக்காக தவம் புரிந்துக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் மூலவர் பெருமாள் பெரிய உருவத்துடன் இருக்கிறார். அவருக்கு கீழே ஒரே சிம்மாசனத்தில் உற்சவர் செந்தாமரைக் கண்ணனும் பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.

உற்சவர் செந்தாமரைக் கண்ணனுக்கும் பங்கஜவல்லி தாயாருக்கும் வருடத்தில் சித்திரை-கோடை பூச்சாற்று உற்சவம் (இந்த உற்சவம் மட்டும் பங்கஜவல்லி தாயாருக்கு கிடையாது, பெருமாளுக்கு மட்டும் தான் ) , வைகாசி-வசந்தோற்சவம், ஆடி- ஜேஷ்டாபிஷேகம், புரட்டாசி-பவித்ர உற்சவம், ஐப்பசி- ஊஞ்சல் உற்சவம், பங்குனி- பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்கள் நடைபெறும்.

தாயார்
தாயார் பங்கயச்செல்வி என்கிற பங்கஜவல்லி தாயார். இந்த ஊரில் தாயாருக்கு ஆதிபத்யம். அதாவது செங்கோல் ஆட்சி தாயாருக்கு தான். புறப்பாடு காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்தொடர்ந்து வருவார். மாலை தாயார் சூரிய அஸ்தமனத்திற்குள் மூலஸ்தானம் சேர்ந்து விடுவார். பெருமாள் வாகன புறப்பாடு அல்லது அன்றைய தினத்திற்கான புறப்பாட்டை முடித்து விட்டு நாழி கேட்டான் வாயில் அருகில் நின்று தாயாருக்கு ஏன் நேரம் ஆனது என கூறிய பின் மூலஸ்தானம் சேருவார். தனிக்கோவில் நாச்சியார் செங்கமலவல்லி தாயார் (செண்பகவல்லி அல்ல). வருடத்தில் ஒரே ஒரு நாள் – பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று செங்கமலவல்லி தாயார்-பெருமாள்-பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளி சேர்த்தி கண்டருளுவார்கள். அன்று ஒரு நாள் மட்டும் இத்தனை நாள் பெருமாளின் வலது புறம் இருந்த பங்கஜவல்லி தாயார் அந்த இடத்தை செங்கமலவல்லி தாயாருக்கு விட்டு கொடுத்து தான் பெருமாளின் இடது புறத்தில் அமர்வார்.

செங்கமலவல்லி தாயாருக்கு வருடத்தில் சித்திரை அல்லது வைகாசி- கோடை பூச்சாற்று உற்சவம், ஆடி- ஜேஷ்டாபிஷேகம், புரட்டாசி-நவராத்திரி உற்சவம், ஐப்பசி- ஊஞ்சல் உற்சவம், பங்குனி- சேர்த்தி உற்சவங்கள் நடைபெறும்.

பங்கஜவல்லி தாயாருக்கு பெருமாளுக்கு நடக்கும் அனைத்து உற்சவங்களும் (கோடை பூச்சாற்று உற்சவம் தவிர) நடக்கும்.

தீர்த்தம்
திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.

விமானம்
விமலாக்ருதி விமானம்.

சிறப்பம்சம்
எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தக்ஷிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதகிரி என்றும் பெயர் வந்தது.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் ஆதிபத்யம். இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’.

இக்கோவிலுக்கு பெருமாள் தரிசிக்க செல்லும் பொழுது முதலில் 18 இருக்கும். இவை 18 பகவத்கீதை அத்யாயங்களை குறிக்கிறது. இதை ஏறிய உடன் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. இவரை சேவித்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். பின் வரும் 4 படிகள் 4 வேதங்களை குறிக்கிறது. பின் வரும் 5 படிகள் பஞ்சபூதங்களை குறிக்கிறது. பின் வரும் 8 படிகள் அஷ்டாக்க்ஷர மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணா ) குறிக்கிறது. பின் வரும் 24 படிகள் காயத்திரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிக்கிறது. இதற்கு பின்பே பெருமாளை சேவிக்க இயலும். அதாவது இத்தனை விஷயங்களை விட உயர்ந்தவர் இந்த பெருமாள்.
Thiruvellarai Sri Pundarikaksha Perumal Temple Therottam | Thiruvaiyaru
திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேரோட்டம் | திருவையாறு

Date: 04-04-2024

Related Articles

Back to top button
Close