Videos

Thirunallaru Sri Dharbaranyeswara Swami Temple Chithirai Maatha Pradhosham

#திருவையாறு #தருமை_ஆதீனம் #பிரதோஷ
திருநள்ளாறு | ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி ஆலய | சித்திரை மாத | பிரதோஷம்

#thiruvaiyaru #dharumai_adheenam #pradhosham
Thirunallaru | Sri Dharbaranyeswara Swami Temple | Karthikai Maatha Pradhosham

Date: 20-04-2024

Notes :
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதமும் தமிழ் வருடப்பிறப்பை தொடர்ந்து வரும் வளர்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் தமிழ் வருடப்பிறப்பை ஓட்டி வரும் முதல் பிரதோஷமாகும். சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.முன்னதாக மஞ்சள்,பால்,தயிர்,விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close