Thirunallaru Sri Dharbaranyeswara Swami Temple Brahmotsava Vizha Therkal Mukurtham
#திருவையாறு #தருமை_ஆதீனம் #பிரதோஷ
திருநள்ளாறு | ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி ஆலய | பிரம்மோற்சவ விழா | தேர்க்கால் முகூர்த்தம்
#thiruvaiyaru #dharumai_adheenam #pradhosham
Thirunallaru | Sri Dharbaranyeswara Swami Temple | Brahmotsava Vizha | Therkal Mukurtham
Date: 20-04-2024
Notes :
திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவிற்கான தேர்க்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து மே 19ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம்.சப்த விடங்க ஸ்தலங்களில் நகவிடங்க ஸ்தலமாகவும், நவக்ரஹ ஸ்தலங்களில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக விளங்கும் ஸ்தலமாகவும் திகழும் இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவின் திருக்தேரோட்டத்திற்கான தேர்க்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இவ்வாலயத்தில் நடைப்பெற உள்ள ஐந்து தேர்களுக்கான கால்கள் மற்றும் கொடி மரத்து விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து தேர்களிலும் தேர்க்கால் நடப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கொடியேற்றம் வரும் மே 05ஆம் தேதியும், தியாகராஜர் ஆட்டம் எனப்படும் உன்மத்த நடனம் மே 16 தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் மே 19ம் நடைபெற உள்ளது. விழாவில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளும் மாவட்ட, ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.