Videos

Thirukkadaiyur Sri Amirthagadeswarar Temple Chithirai Vizha Kodiyetram | திருக்கடையூர் | மயிலாடுதுறை

மயிலாடுதுறை

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்கோவிலில் இறைவன் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ்வாய்ந்த ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மார்க்கண்டேயர் உயிரைக் காப்பாற்றுவதற்காக இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்து மீண்டும் எமனை உயிர்ப்பித்த தலம். மார்க்கண்டேயர் என்றும் 16 (சிரஞ்சீவி) என்ற வரத்தை இவ்வாலயத்தில் பெற்றதால் இக்கோயிலில் ஆயுள் விருத்தி வேண்டி வயதான தம்பதிகள் ஆயுள்சிய ஹோமம் செய்து திருமணங்கள் மற்றும்  பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். பல்வேறு சிறப்புகள் உடைய அட்டவிரட்ட தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தில் இறைவன் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். புனித நீர் கடங்கள் பூஜிக்கப்பட்டது. கொடி மரத்திற்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷபக் கொடியேற்றப்பட்டது விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாகத்தினர்  கோயில் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 16-ம் தேதி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் சாமி திருக்கல்யாணம், 19- ஆம் தேதி  இரவு காலசம்ஹாரமூர்த்தி எமனை வதம் செய்யும் ஐதீக திருவிழாவும்,21 -ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.

Date: 06-04-2024

Related Articles

Back to top button
Close