Thiruvaiyaru

Rajaalangaram Kovai – Puliyakulam Sri Munthi Vinayakar Temple

Rajaalangaram Kovai – Puliyakulam Sri Munthi Vinayakar Temple

ராஜஅலங்காரம் கோவை – புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோவில

Date :07-09-2024

கோவை விநாயகர் சதுர்த்தி பெருந்திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே ஒரே கல்லில் செய்யப்பட்ட 190டன் எடை கொண்ட மிக பெரிய விநாயகர் புலியகுளம் அருள்மிகு ஸ்ரீ முந்தி விநாயகர் விநாயகருக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்கராத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி பெருந்திருவிழா வெகுவிமர்சையக கொண்டபடுவரும் நிலையில் கோவை பிரசிதி பெற்ற புலியகுளம் அருள்மிகு ஸ்ரீ முந்தி விநாயகர் கோயில் கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆசியாவிலேயே, ஒரே கல்லால் 19 அடி 10 அங்குலம் உயரமும் 10 அடி10 அங்குலம் அகலமும் கொண்ட மிகப் பெரிய விநாயகர் சிலை என்ற பெருமையை கொண்ட புலியகுளம் அருள்மிகு ஸ்ரீ முந்தி விநாயகர் கோயில் சிலை பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தி பெருந்திருவிழா நாள் இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க யாகவேள்வி தொடங்கி சிறப்பு மகா அபிசேகம் நடைபெற்றது இதில் 16 வகையான பல்வேறு வாசனை திரவியங்களல் அபிசேகத்தை தொடர்ந்து பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் இளநீர் பன்னீர் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் அபிசேகம் நடைபெற்றதை தொடர்ந்து அருல்மிகு ஸ்ரீ முந்தி விநாயகருக்கு
சுமார் 50 கிலோ எடையில் சந்தன காப்புடன் 2 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செயபட்டு விநாயகருக்கு பிடித்த பலகாரங்கள் கொழுக்கட்டை அதிரசம் முறுக்கு லட்டு போன்ற இனிப்பு பலகாரங்கள்லுடன் மாகா தீபராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனமுருகி வேண்டி வணங்கினர் பின்னர் அவர்களுக்கு அருட்பிரசாதம் வலங்ப்பட்டது

Exit mobile version