Videos

Rajaalangaram Ariyakudi- Puththur Shakthi Vinayakar Temple

Rajaalangaram Ariyakudi- Puththur Shakthi Vinayakar Temple

ராஜஅலங்காரம் அரியக்குடி- புத்தூர் சக்தி விநாயகர் கோவில்
Date :07-09-2024

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அரியக்குடி புத்தூர் சக்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியகுடி புத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்று கண்மாய் கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இருந்து சக்தி விநாயகருக்கு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர் அதன் பின்பு யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடத்திலிருந்து கும்ப நீர் எடுத்து வந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து 21 வகையான மூலிகை அபிஷேகங்களும் நடைபெற்று சக்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர்..

Related Articles

Back to top button
Close