நவராத்திரி விழாவின் சிறப்புகள் | Navaratri 2024 | Thiruvaiyaru
நவராத்திரி விழாவின் சிறப்புகள் | Navaratri 2024 | Thiruvaiyaru
தேதி : 03.10.2024
#திருவையாறு #தருமை_ஆதீனம் #நவராத்திரி #சிறப்புகள் #thiruvaiyaru #dharumai_adheenam #Navaratri #specials
அனைவருக்கும் வணக்கம், இன்றைய வீடியோவில், நவராத்திரி விழாவின் சிறப்புகள் பற்றி சிந்திக்கலாம். முழு தகவல்களை அறிய வீடியோ முழுமையாக காணுங்கள்.
புரட்டாசி மாதம் என்றதும் அனைவரின் நினைவுக்கு வருவது பெருமாள் வழிபாடு, அதற்கு அடுத்தபடியாக நவராத்திரி விழா அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் அம்பாளுக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது நவம் என்றால் 9 என்று அர்த்தம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தியின் ஒன்பது ரூபங்களை அடையாளப்படுத்துகின்றது.
அந்த வகையில்
முதல் நாள் சைலபுத்ரி அதாவது மலைமகள் ரூபம்
இரண்டாம் நாள் பிரம்மச்சாரிணி என்ற பிரம்மச்சாரி ரூபம்
மூன்றாம் நாள் சந்திர காண்டா என்ற சந்திர பிறையை சூடிக் கொண்டு மணியின் ஓசை போன்ற கம்பீரமான ரூபம்
நான்காம் நாள் கூஷ்மாண்டா அதாவது சிறிய உருண்டை வடிவிலான உலகத்தை உருவாக்கியவள் என்பது பொருள்
ஐந்தாம் நாள் ஸ்கந்தமாதா என்கின்ற முருகனின் அன்னை ரூபம்
ஆறாம் நாள் காத்தியாயினி, காத்தியாயன முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு மகளாக பிறந்ததால் கார்த்தியாயினி என்று அழைக்கப்படுகிறாள்
ஏழாம் நாள் காளராத்திரி என்கின்ற சரஸ்வதி தேவியின் ரூபம்
எட்டாம் நாள் மகா கௌரி ரூபம் என்கின்ற வெண்மை நிறத்தில் திருமேனியை கொண்ட ரூபம். இந்த நாள் துர்க்காஷ்டமி என்று அழைக்கப்படுகின்றது.
ஒன்பதாம் நாள் சித்தி தாத்ரி அதாவது வெற்றியை தருபவள் என்று பொருள்
ஆகிய ஒன்பது ரூபங்களாக ஆவாகனம் செய்து நவசக்தி விழாவாக நடைபெறுகிறது இந்த நவராத்திரி விழா. இவ்விழாவில் முதல் மூன்று நாட்கள் மலைமகள் ரூபங்களாகவும் அடுத்த மூன்று நாட்கள் அலைமகள் ரூபங்களாக கடைசி மூன்று நாட்கள் கலைமகள் ரூபங்களாக நடைபெறுகிறது.
இந்த நவராத்திரி விழாவின் 9 நாட்களிலும் அவரவர்கள் இல்லத்தில் தங்களது சக்திக்கு ஏற்றவாறு கொலு வைத்து வழிபாடு செய்யலாம்.
கொலு வைத்து வழிபாடு செய்யும்பொழுது மூன்று படிகள் 5 படிகள் 7 படிகள் 9 படிகள், 11 படிகள் என்ற எண்ணிக்கைகளில் வைத்து வழிபாடு செய்து தினசரி இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அதனை அருகில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்யலாம். கொலு வைத்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் தினசரி ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்து வழிபடலாம். கொலு பொம்மைகள் மண் பொம்மைகளாக இருப்பது மிகவும் சிறப்பு.
இந்த நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளை ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களது தொழிலுக்கு பயன்படும் உபகரணங்கள் கருவிகள் ஆகியவற்றை சுத்தம் செய்து பொட்டு வைத்து, மாணவர்கள் தங்களது கல்விப் புத்தகங்களுக்கு பொட்டு வைத்து வைத்து சரஸ்வதி தேவி முன்வைத்து, செவ்வந்தி பூ மாலை சாற்றி வழிபாடு செய்வார்கள்.
ஒன்பது நாட்கள் நவசக்தி வழிபாடு முடித்து, துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்த பத்தாவது நாளை விஜயதசமி என்கின்ற வெற்றித்திருநாளாக கொண்டாடுகிறோம்.
இந்த நன்னாளில் குழந்தைகளுக்கு முதல் எழுத்து பயிற்சியாக “வித்யா ஆரம்பம்” என்கின்ற சடங்கை செய்கிறார்கள். பள்ளிகள், கலை பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கு விஜயதசமி சிறந்த நாளாக கருதப்படுகிறது.
நவராத்திரியின் சிறப்புகள் பற்றிய இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழாவினை அனைவரும் சிறப்பாக கொண்டாடி அம்பாளின் அருளை பெற வேண்டுகிறோம்.