Thiruvaiyaru

திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆலய விஜயதசமி விழா வித்யாரம்பம் | Vidyarambham

🌺🙏 Thiruarur – Koothanur Sri Saraswathi Amman Temple Vijayadashami Festival Vidyarambham | திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆலய விஜயதசமி விழா வித்யாரம்பம்🙏🌺

🙏 ஸ்ரீ மகா சரஸ்வதி ஆலயத்தில் வித்யா ஆரம்பம் நிகழ்வு.. குழந்தைகளுடன் பெற்றோர்கள் (அட்சய பிரயாசம் வித்யா ஆரம்பம் செய்து வழிபாடு..தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள சரஸ்வதி அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று தனி ஆலயம் அமையப்பட்டுள்ள தலமாக இத்தலம் விளங்கி வருகிறது.தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் சரஸ்வதி அம்மனின் அருள் பெற்று அவர் பாடல்களை இயற்றிய காரணத்தினாலும் இந்த ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது…
இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நேற்று சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதணை நடைபெற்றது. தொடர்ந்து
விஜயதசமி நாளான இன்று இந்த ஆலயத்தில் புதிதாக பள்ளி செல்ல உள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக தங்களது குழந்தைகளுடன் வந்து சரஸ்வதி அம்மனை வழிபட்டனர்..
குறிப்பாக இந்த வித்யாரம்பம் நிகழ்வில் குழந்தைகளை அமர வைத்து வேத மந்திரங்கள் கூறி ஓம் என்கிற பிரணவ மந்திரத்தை நெல்மணியில் எழுத வைத்து அதனைத் தொடர்ந்து தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அ என்ற உயிர் எழுத்தை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தைகள் சிறப்பாக கல்வி கற்பார்கள் என்பது இந்த ஆலயத்தில் ஐதீகமாக இருந்து வருகிறது.இந்த நிகழ்வை முன்னிட்டு மாவட்ட காவல்துறையின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.🙏

📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : கூத்தனூர், திருவாரூர்.
📅 தேதி : 19.10.2026

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw

#திருவாரூர் #கூத்தனூர் #சரஸ்வதிஅம்மன் #கூத்தனூர்சரஸ்வதி #விஜயதசமி #விஜயதசமிவிழா #வித்யாரம்பம் #அட்சராப்பியாசம் #சாமிதரிசனம் #சரஸ்வதிபூஜை #கல்விக்கடவுள் #அம்மன்தரிசனம் #ஆன்மிகம் #பக்தி #கோவில்விழா #Tiruvarur #Koothanur #SaraswathiAmman #KoothanurSaraswathiTemple #Vijayadashami #Vijayadashami2026 #Vidyarambham #Aksharabhyasam #DivineDarshan #SaraswathiPooja #TempleFestival #TamilDevotional #DevotionalVideo #HinduTemple #Spiritual

Exit mobile version