
திருவண்ணாமலை அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் & மகாதீபம் – தீபத்திருவிழா | Thiruvannamalai Deepam
🌺🙏 திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் & மகாதீபம் | Thiruvannamalai Sri Arunachaleswarar Temple Thirukarthigai Deepam Festival Arthanareeswarar Ananda Thandavam & Maha Deepam 🙏🌺
குறிப்பு:
✨ அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்தோடு கொட்டும் மழையில் மகாதீபம் ஏற்றப்பட்டது – லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்தை கண்டு களித்து கிரிவலம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் ஆனந்த தாண்டவம் ஆட அண்ணாமலையார் மலை உச்சியின் மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும், இரவு உற்சவத்தில் விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர்கள் பல்வேறு வாகனங்கள் எழுந்தாளி மாட வீதிகளில் வீதி உலா வந்தனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் கருவறை முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழுங்க ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் விநாயகர் கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுப்பிரமணியர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பின்னர், அண்ணாமலையாருக்கு அரோகரா பக்தி முழக்கத்தோடு அண்ணாமலையார் சன்னதியில் இருந்து அண்ணாமலையார் உடனானாகிய உண்ணாமலையம்மன் கொடிமரம் அருகே கொட்டும் மழையில் ஆனந்த நடனம் ஆடியபடி தீபம் மண்டலத்திற்கு சென்றார்.
அதைத் தொடர்ந்து பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளியனர்.
அதைத்தொடர்ந்து, கோயிலில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு,
ஆண்டுதோறும் மகா தீபத்தன்று மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிக்கக்கூடிய சிவனும் பார்வதி உருவமான அர்த்தநாரீஸ்வரர் சரியாக ஆறு மணி அளவில் கொடிமரம் அருகே ஆனந்த தாண்டவம் ஆடி கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதே வேலையில் கொடிமரம் அருகே உள்ள அகண்ட தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலைமீது 5 3/4 முக்கால் அடி உயரம் கொண்ட தீப கொப்பரையில் பருவத ராஜகுலத்தைச் சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டு அண்ணாமலையார் தீப தரிசனமாக காட்சியளித்தார்.
மேலும் , தீப மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள் மகா தீபத்தை தரிசனம் செய்தனர். கொட்டும் மழையிலும் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்தோடு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.
நேற்றைய ஏற்றப்பட்ட மகா தீபமானது 11 நாட்கள் தொடர்ந்து எறிய உள்ளது. பின்னர், தீபக் கொப்பரை அண்ணாமலையார் திருக்கோவிலிற்கு கொண்டுவரப்பட்டு
தீப மை தயாரிக்கப்பட உள்ளது. பின்னர் ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜருக்கு தீப மை திலகமிட்டபின் பக்தர்களுக்கு தீப மை பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: திருவண்ணாமலை.
🗓️ தேதி: 03.12. 2025
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 தமிழரின் ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
Tags:
#திருவண்ணாமலை #Thiruvannamalai #அண்ணாமலையார் #Annamalaiyar #அருணாசலேஸ்வரர் #Arunachaleswarar #திருக்கார்த்திகை #Thirukarthigai #கார்த்திகைதீபம் #KarthigaiDeepam #மகாதீபம் #MahaDeepam #அர்த்தநாரீஸ்வரர் #Arthanareeswarar #ஆனந்ததாண்டவம் #AnandaThandavam #தீபத்திருவிழா #DeepamFestival #Live #LiveDarshan

