Videos

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலய – #தேய்பிறைஅஷ்டமி #பைரவர் வழிபாடு | #thiruvaiyaru

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீபைரவருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதற்க்கு முன்பாக பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ பைரவரை தரிசித்து விளக்கேற்றி வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close