திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நான்காம் நாள் தங்கச் சப்பரம்
திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | கந்த சஷ்டி திருவிழா நான்காம் நாள் சுவாமி ஜெயந்திநாதர்
தங்கச் சப்ரத்தில் எழுந்தருளினார் | திருவையாறு
Thiruchendur | Sri Subramaniya Swamy Temple | Kandha Sashti Thiruvizha 4th Day Thanga Sapparam | Thiruvaiyaru
#Thiruchendur #dharumai_adheenam #Subramaniya #Swamy #Aavani #Kodiyettram #thiruvizha #festival #thiruvaiyaru #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி #ஆவணி #திருவிழா #கொடியேற்றம்
Date : 04.11.2024
Notes :
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா 3-வது நாள்
சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில்
முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா 2 ம் தேதி காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்த சஷ்டி திருவிழாவின் 3- வந்து நாளான இன்று
கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும்,
4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது
காலை 7 மணிக்கு யாகசால பூஜை நடைபெற்றது. இதனையடுத்து
யாகசாலை மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்கார தீபாரதி நடந்தது. இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி,தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாசத்தில்
எழுந்தருளினார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் 7 ம்தேதி வியாழக்கிழமை மாலையில் நடைபெறுகிறது.