திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்கள் தங்கி விரதம் | திருவையாறு
Thiruchendur | Sri Subramaniya Swamy Temple | Kandha Sashti Thiruvizha Munnittu Bakthargal Thangi Viradham | Thiruvaiyaru
#Thiruchendur #dharumai_adheenam #Subramaniya #Swamy #Aavani #Kodiyettram #thiruvizha #festival #thiruvaiyaru #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி #ஆவணி #திருவிழா #கொடியேற்றம்
Date : 06.11.24
Notes :
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது.
இந்த கோவில் கடற்கரையோரம் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் சிறந்த பரிகார ஸ்தலமாகவும் இருந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவாக கந்த சஷ்டி திருவிழா விளங்குகிறது.
தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி விரதம் இருப்பது இதன் சிறப்பாகும். இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா
கடந்த 2ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
குழந்தை வரம் ,
திருமணதடை,
தொழில் வளம் பெற உள்ளிட்ட பல
வேண்டுதல்களுடன் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் ஆறு நாட்கள் தங்கி இருந்து விரதம் இருந்து வருகின்றனர். தங்கி விரதம் இருக்கும் ஒரு சில பக்தர்கள் பால் பழங்கள் மற்றும் உணவாக எடுத்துக் கொண்டும், ஒரு சில பக்தர்கள் தண்ணீர் மட்டும் உணவாக எடுத்துக் கொண்டும் விரதம் இருந்து வருகின்றனர். மேலும் ஆயிரம் முறை
ஓம் சரவண பவ
போன்ற மந்திரங்களையும் எழுதி வருகின்றனர். இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மாலை கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.