Thiruvaiyaru

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி முன்னிட்டு பரமானந்த குழுவினர் பஜனை பாடினர்

திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | கந்த சஷ்டி விழா முன்னிட்டு ஸ்ரீ பரமானந்த பஜனை குழுவினர் வேடமனிந்து பஜனை பாடல்களை பாடினர் | திருவையாறு

Thiruchendur | Sri Subramaniya Swamy Temple | Kandha Sashti Thiruvizha Munnittu Sri Paramanandha Kuzhuvinar Bajanai Padinar | Thiruvaiyaru

#Thiruchendur #dharumai_adheenam #Subramaniya #Swamy #Aavani #Kodiyettram #thiruvizha #festival #thiruvaiyaru #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி #ஆவணி #திருவிழா #கொடியேற்றம்

Date : 06.11.24

Notes :

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ பரமானந்த பஜனை குழுவினர் வேடமனிந்து பஜனை பாடல்களை பாடினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் போது கோவில் வாளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும் கந்த சஷ்டி கவச பாடல்களை பாடியும் ,பஜனை பாடல்களை பாடியும், விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ பரமானந்த பஜனை குழு சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது கோவில் வளாகத்தில் தங்கி காலை முதல் மாலை வரை பஜனை பாடல்களை பாடி வருகின்றனர். ஐந்தாம் திருநாளான இன்று சிவன், பார்வதி, விநாயகர், முருகன், அவ்வையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பஜனை பாடல்களை பாடி வந்தனர். மேலும் சூரசம்காரம் நடைபெறுவது குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version