Videos

திருக்கடையூர் திருக்கோயில் சிறப்புகள் #திருக்கடையூர் #கோவில் #shorts #சிறப்புகள் #திருவையாறு

திருக்கடையூர் | ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஆலய | சிறப்புகள் | திருவையாறு

Thirukadaiyur | Sri Amirthakadeswarar Temple | Specialties | Thiruvaiyaru

Date:28.05.2025

Notes:
இந்த பூமியில் மரணத்தையும் வென்ற புனிதத் தலம் ஒன்று உள்ளது…
அது தான் திருக்கடையூர்! திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் அருளாட்சியில் உள்ள ஸ்தலம் திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஆலயம். தமிழ்நாட்டிலேயே இது முதன்மை ஸ்தலமாக விளங்குகிறது. அம்பாள் அபிராமி தேவி,மூலவர் அமிர்தகடேஷ்வரர்,
உற்சவர் திருநாமம் காலசம்ஹார மூர்த்தி,ஸ்தல விருட்சம் வில்வமரம் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயிலின் முக்கிய சிறப்புகள் மூன்று: ஷஷ்டியப்தபூர்த்தி – அறுபதாம் வயதில் மகிழ்வாகக் கொண்டாடப்படும் திருமண நிகழ்ச்சி, சதாபிஷேகம் – எண்பதாம் வயதில் வாழ்நாள் திருநாள், ஆயுள் ஹோமம் – உடல் நலம் மற்றும் நீடித்த ஆயுளுக்கான வேள்வி. இந்த விழாக்கள், ஏழையா, வளமுடையவரா என வேறுபாடு இன்றி, தருமபுரம் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார். அந்த அருளின் நினைவாகவே இன்று, திருக்கடையூர் கோயிலில் மரண பயம் நீங்கும்,
ஆயுள் பெருகும் என நம்பப்படுகிறது. அமாவாசையில் முழு நிலவை உலகம் தரிசித்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம். இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது. மேலும், பல முக்கிய பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கடையூர் – மரணத்தை வென்ற இடம்…நீண்ட வாழ்வுக்கு ஆரம்பமான தலம்!

Related Articles

Back to top button
Close