தஞ்சாவூர்-வல்லம் ஶ்ரீ மாதவயோகநரசிம்ம பெருமாள் ஆலயம் | Vallam Sri MadhavaYogaNarasimha Perumal Temple
தஞ்சாவூர் | வல்லம் | ஶ்ரீ மாதவயோக நரசிம்ம பெருமாள் ஆலயம் | வழிபாடு #2 | திருவையாறு
Thanjavur | Vallam | Sri MadhavaYoga Narasimha Perumal Temple | Vazhipadu #2 | Thiruvaiyaru
தேதி : 07.10.2024
நடை திறக்கப்படும் நேரம் :
காலை : 07:30 முதல் 10.30 வரை
(சனிக்கிழமை மட்டும் மதியம் 12.00 மணி வரை)
மாலை : 04:30 முதல் 07.00 வரை
#thiruvaiyaru #vallam #thanjavur #madhvaperumal #narashimha #perumal #vazhipadu2 #2 #திருவையாறு #பெருமாள்வழிபாடு #நரசிம்மர் #வல்லம் #மாதவயோகநரசிம்மபெருமாள்
Google Map Location : https://maps.app.goo.gl/KgCqhHk9nzA1knTE6
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில்
நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம்
என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி ஶ்ரீபூமிதேவி சமேத
ஶ்ரீ தேவநாத பெருமாள் ஆலயம். இத்திருக்கோவிலை பற்றிய
முழு தகவல்களை அறிய வீடியோ முழுமையாக காணவும்.
தஞ்சாவூரில் இருந்து வல்லம் செல்லும் வழியில் வல்லம்
பேருந்து நிலையம் அருகில் பிரதான சாலையில்
அமைந்துள்ளது இவ்வாலயம். தஞ்சாவூர் புதிய பேருந்து
நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து
12 கிலோமீட்டர் தொலைவிலும் தஞ்சாவூர் ரயில்
நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும்
அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருக்கோவில்
12ஆம் நூற்றாண்டில் விக்ரமச்சோழன் என்ற மன்னரால்
கட்டப்பெற்றது. பின்னர் பாண்டியர்கள், ஹோய்சலர்கள்,
நாயக்கர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் புனரமைக்க
பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வல்லப சோழன் என்ற மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட
ஊர் என்பதால் வல்லப புரி என்றும், விக்கிரம சோழனால்
கட்டப்பட்ட கோவில் அதனால் விக்ரம விண்ணகரம் என்றும்,
கோவிலை சுற்றி அகலிகை அமைக்கப்பட்டு அதன் இடையே
கோவில் அமைக்கப் பெற்றுள்ளதால் கோட்டைமேடு பெருமாள்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாலயத்தின் கோபுரம் சுல்தான் படையெடுப்பால்
சிதைக்கப்பட்டதால் மொட்டை கோபுரமாக காட்சியளிக்கிறது.இக்கோவிலின் தீர்த்தம் வஜ்ரத் தீர்த்தம் என்றும் இந்திரன்கௌதம முனிவரிடம் பெற்ற சாப விமோசனத்திற்காக
நீராடியதால் கௌதம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இத்திருக்கோவில் 1996 ஆம் ஆண்டு வரை பூட்டி கிடந்ததாகவும்,
பின்னர் புனரமைக்கப் பெற்று 15 நாட்களில் கும்பாபிஷேகம்
நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் துவஜாஸ்தம்பம், அதைத்தொடர்ந்து
மூலவர் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமிதேவி சமேத ஶ்ரீ தேவநாதப் பெருமாள் கிழக்கு
நோக்கி அமர்ந்த கோலத்தில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் படும்படி காட்சி அளிக்கிறார்.
மேலும் இவ்வாலயத்தில் தெற்கு நோக்கிய ஶ்ரீ யோக நரசிம்மர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் ஶ்ரீ மாதவப் பெருமாள் & ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் சிலைகள் சுதை சிற்பமாக உள்ளதால் வருடத்தில் நான்கு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகின்றது. அதாவது விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று சொல்லப்படுகின்ற தமிழ் மாதங்களான வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களின் முதல் நாளில் திருமஞ்சனம்
செய்யப்படுகின்றது.
ஆலயத்தின் வடபுறத்தில் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்ற விநாயகர் சன்னிதியும், ராகு கேது உடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
அதை எடுத்து ஶ்ரீ நம்மாழ்வார், ஶ்ரீ ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், சுவாமி தேசிகன் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு
காட்சியளிக்கின்றார். மேலும் ஸ்ரீ சீதாதேவி சமேதராக ஶ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணன் & ஸ்ரீ ஆஞ்சநேயருடன் காட்சியளிக்கின்றார்.
இவ்வாலயத்தின் உள் பிரகாரத்தில் ஶ்ரீ கமலவல்லி தாயாருக்கு
தனி சன்னதி உள்ளது. இத்திருக்கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பாக்கியம் பெற இவ்வாலயத்தில் உள்ள தாயாரிடம்
பௌர்ணமிக்கு முதல் நாள் தம்பதி சமேதராக ஆலயத்திற்கு வந்து எலுமிச்சை கனி வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்திட பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம்.
தொழில் பிரச்சனை தீர, திருமணத்தடை நீங்க இங்கு அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் விரைவில் நன்மை கிட்டும் என்பது
இங்கு வருகின்ற பக்தர்களின் நம்பிக்கை.
இதய நோய் உள்ளவர்கள் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டால் விரைவில்
குணமடைவார்கள் என்பது ஐதீகம்.
இவ்வாலயத்தின் முக்கிய விழாக்களாக புரட்டாசி மாதத்தில்
திருக்ககல்யாண உற்சவம், ஆடிப்பூரத்தில் ஸ்ரீ ஆண்டாளுக்கு
திருக்கல்யாணம் & வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக
நடைபெறுகிறது.
இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி
அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம்.
நன்றி! வணக்கம்.