தஞ்சாவூர் – பாபநாசம் ஸ்ரீ சீனிவாசபெருமாள் ஆலயம் | Papanasam Sri Srinivasa Perumal Temple
தஞ்சாவூர் – பாபநாசம் | ஸ்ரீ பங்கஜவல்லி உடனாகிய
ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயம் | வழிபாடு #11 | திருவையாறு
Thanjavur – Papanasam | Sri Srinivasa Perumal Temple | Vazhipadu #11 | Thiruvaiyaru
தேதி : 09.12.2024
நடை திறக்கப்படும் நேரம் :
காலை : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும்,
மாலை : மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
#திருவையாறு #thiruvaiyaru #vazhipadu #வழிபாடு #பாபநாசம் #தஞ்சாவூர் #Thanjavur #papanasam #srinivasaperumal #vazhipadu11 #வழிபாடு #11
Google Map Location :https://maps.app.goo.gl/7heBnmf4DuVzSwsi9
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பங்கஜவல்லி தாயார் உடனாகிய ஸ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தின் சுவாரஸ்யமான வரலாறு மற்றும் ஆச்சரியங்கள் பற்றிய முழு தகவல்களை அறிய காணொளியை முழுமையாக காணுங்கள்.
இவ்வாலயம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது இத்திருக்கோவில்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் பின்னர் விஜயநகர மன்னர்களால் புணரமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாலயம் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
துவாபரயுகத்தில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது மற்றும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஆழ்வார்களால் உருவாக்கப்பட்ட திவ்யபிரபந்தங்கள் மறைந்து, மீண்டும் நாதமுனிகள் மூலம் திவ்ய பிரபந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது விடுபட்ட திவ்ய தேசமாக இத்தலம் விளங்குகின்றது.
மூன்று நிலை கொண்ட, ஆலயத்தின் ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்லும் பொழுது கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதன் அருகில் மூலஸ்தானத்தை நோக்கியபடி ஸ்ரீ கருடாழ்வார் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகில் அமைந்துள்ள இரண்டாம் நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே செல்லும் பொழுது நேரே பல தூண்களுடன் மூலஸ்தானம் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து ஆலயத்தின் பிரகாரத்தில் வலம் வரும் பொழுது ஸ்ரீ பங்கஜவல்லி தாயாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது இங்கு தாயார் மேல் இரு கைகளில் தாமரை மலருடனும் கீழ் இரு கைகளில் அபயவரத ஹஸ்தராக காட்சியளிக்கின்றார். ஆலயத்தின் பின் பிரகாரத்தில் வேப்ப மரத்துடன் இணைந்த அரச மரத்தின் கீழ் நாகர் சன்னதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பிரகாரத்தை வலம் வரும் பொழுது வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டாள் நாச்சியார் கையில் கிளிச்செண்டு ஏந்திய படி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீ ராமானுஜர் உள்ளிட்ட 12 ஆழ்வார்களுக்கு தனி சன்னதியும், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விஸ்வக்சேனர், ஸ்ரீ மாதவன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் என்று பெயர் பெற்று விளங்குகின்ற பல முக்கியமான தலங்களில் ஒன்றான இத்தலத்தின் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
இங்குள்ள பெருமாள் மாதவ பிராமணர் என்ற அந்தணருக்கு பிரம்மஹத்தி தோஷத்தையும், பிரதாப வீரன் என்ற மகாராஜாவிற்கு பஞ்சபாதக தோஷத்தையும் நீக்கி நற்கதியளித்த பெருமாள் என்பதால் ஸ்ரீ பாபவிமோசன பெருமாள் என்ற திருநாமம் பெற்றுள்ளார். இதனாலேயே இவ்வூர் பாபநாசம் என்றும், இவ்வாலயத்தின் தீர்த்தம் பாபவிநாசினி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. இக்கோவிலின் மூலவர் விமானம் பாப விமோசன விமானம் என்று அழைக்கப்படுகின்றது. நான்கு புறமும் திருக்கண்ணபுரம் போல் மதில்களால் சூழப்பட்ட விமானம் என்பதால் பார்த்தாலே பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவகிந்திபுரம் ஸ்ரீ தேவநாதப் பெருமாள் ஆலயத்ததிற்கு அடுத்தபடியாக இங்கு ஸ்ரீ ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி ஸ்ரீ லட்சுமி தேவியுடன் எழுந்தருளி காட்சியளிக்கிறார.
இவ்வாலயத்தின் முக்கிய பிரார்த்தனையாக 7 வியாழக்கிழமைகள் ஸ்ரீ ஹயக்ரீவருக்கு துளசி, மஞ்சள், குங்குமம் அர்ச்சனை செய்தால் கல்வி, ஞானம், சக்தி பலம், ஐஸ்வர்யம், புத்திர பாக்கியம் தந்து திருமண தடையை நீக்கி அருள் புரிகிறார் என்பது நம்பிக்கை. இவ்வாலயத்தின் மூலவர் கையில் தாமரை மலருடன் குபேரனுக்கு அதிபதியாகி மக்களுக்கு உதவ வேண்டி குபேரனுக்கு இந்த தலத்தில் தனம் தந்து அருளுகிறார். மேலும், தொடர்ந்து 16 நாட்கள் இவ்வாலயத்தின் 5 ம் பிரகாரத்தை வலம் வந்து இறைவனை வழிபட வியாபார அபிவிருத்தி, நிலம், வீடு திரும்ப வராத பணம் மற்றும் இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஸ்ரீ பங்கஜகவல்லி தாயாருக்கு அரிசி மாவில் செய்த புட்டு கோவிலில் செய்து நைவேத்தியம் செய்தால் திருமண தடை நீங்கி, புத்திர பாக்கியம் மங்களம் உண்டாகும்.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் தை மாத பௌர்ணமி, திருவோண நட்சத்திரம், அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி விழா, விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி விழா ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இக்கோவில் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்டு பெருமாளின் அருளை பெறும்படி வேண்டிக்கொள்கிறோம். மீண்டும் ஒரு ஆலய வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்.