தஞ்சாவூர் | பழனி | ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயம் | 3 ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024 | திருவையாறு
Thanjavur | Palani | Sri Balathandayuthapani Swamy Temple | 3rd Padaiveedu | Kandha Sasti Vizha 2024 | Thiruvaiyaru
தேதி : 04.11.2024
#thiruvaiyaru #palani #subramanian_swamy #aarupadaiveedu #6 #kandha_sasti #2024 #திருவையாறு #பழனி #பாலதண்டாயுதபாணிசுவாமி #ஆறுபடைவீடு #6 #கந்தசஷ்டி #2024 #Palanimurugan #murugan #முருகன்
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான இன்று அறுபடை வீடுகளில் மூன்றாம் கோவிலான தஞ்சாவூர் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தினை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் மானம்புச்சாவடி என்கின்ற மகர்நோன்புச்சாவடி சின்ன அரிசிக்காரத் தெருவில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்தும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிவில் அமைந்துள்ளது.
சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில், மன்னர் காலத்தில் இக்கோவில் எழுப்பப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. பொதுவாக மன்னர்கள் தங்களுக்கு ஏதேனும் தோஷங்கள் ஏற்பட்டு இருந்தால் அதை சரி செய்ய மேற்கு நோக்கிய ஆலயங்களை கட்டுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர் அவ்வாறே இவ்வாலயமும் மேற்கு நோக்கி அமைந்துள்ளதால் இது மன்னர் காலத்தில் கட்டிய கோயில் என்பதற்கு சான்றாக விளங்குகின்றது.
இவ்வாலயத்தின் மூலவர் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக காட்சியளிக்கின்றார். ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காலபைரவர், ஸ்ரீ நாகக்கன்னி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ நடராஜர், நவகிரகங்கள் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா, ஸ்ரீ ரமணர், ஸ்ரீ கிருபானந்த வாரியார், ஸ்ரீ அருணகிரியார், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ சேக்கிழார், ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ திருஞானசம்பந்தர், ஸ்ரீ சுந்தரர், ஸ்ரீ மாணிக்கவாசகர் ஆகியோரது திரு உருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாலயத்தில் இந்திரன் வந்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது அதற்கு சான்றாக வழக்கமாக முருகர் ஆலயத்தில் மயில் வாகனமாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்கு மாற்றாக இங்கு யானை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கோவில்களிலும் வழக்கமாக ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும் நவகிரகங்களின் சன்னதியானது இவ்வாலயத்தில் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் ராகுவும் கேதுவும் இடம் மாறி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த அமைப்பானது மன்னர்கள் தங்களுடைய கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள செய்யும் பரிகாரமாகும். எனவே இவ்வாலயத்தில் வந்து இறைவனை வழிபட்டால் கால சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. மேற்கு நோக்கிய ஆலயங்களை வழிபடும் பொழுது இக்கால வினைகள் நீங்கும் என்றும், கிழக்கு நோக்கிய ஆலயங்களை வழிபடுவது நம் முன்வினைகளை தீர்க்கும் என்பது ஐதீகம். ஆதலால் மேற்கு நோக்கி இவ்வாலயத்தில் வந்து வழிபட இவ்வாலயத்தில் நம்முடைய இந்த இக்கால வினைகள் நீங்கி நன்மைகள் பிறக்கும்.
இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் பங்குனி உத்திர தினத்தன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மேலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழா மற்றும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் முத்து பல்லக்கு விழா தொடர்ந்து 120 வருடங்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தினை கந்த சஷ்டி விரத நாளில் வழிபட்டு கந்த கடவுளின் அருளை பெற்று உய்வோமாக! நன்றி வணக்கம்!