Videos

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய வரலாறு | Sri Lalita Sahasranamam History of origin | Thiruvaiyaru

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய வரலாறு | திருவையாறு

Sri Lalita Sahasranamam History of origin | Thiruvaiyaru

தேதி : 11.10.2024

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம், இன்றைய வீடியோவில்,
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய வரலாற்றினை
பற்றி சிந்திக்கலாம். முழு தகவல்களை அறிய
வீடியோ முழுமையாக காணுங்கள்.

லலிதா சகஸ்ரநாமம் என்றால் என்ன?
அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகையின் பல்வேறு
குணாதிசியங்களை குறிப்பிடும் விதமாக
ஆயிரம் திரு பெயர்களைக் கொண்டு அர்ச்சித்தல்
லலிதா சகஸ்ரநாமம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த லலிதா சகஸ்ர நாமமானது சமஸ்கிருத
மொழியில் 18 புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட
புராணத்தில், லலிதா பாக்யானம் என்ற பகுதியில்
லலிதா தேவியின் அவதாரமும் சரிதமும்
கூறப்படுகின்றன. அதில் இருந்து ஒரு பகுதியாக
இந்த சஹஸ்ரநாமம் தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால்
ஒவ்வொரு பெயரும் தனித்துவமாக மீண்டும்
இடம்பெறாது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை உடனாகிய
ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயத்தில் லலிதா
சஹஸ்ரநாமம் தோன்றியதாக வரலாறு.
இதனால் அம்பிகையின் வழிபாட்டுக்கு
சிறப்புக்குரிய தலங்களில் ஆகச்சிறந்த ஒன்றாக
இத்தலம் விளங்குகின்றது. இதைப் போற்றும்
விதமாக இவ்வாாலயத்தில் ஆண்டுதோறும்
நவராத்திரி விழா வெகு விமர்சையாக
நடைபெறுகின்றது. நவராத்திரி விழாவின்
கடைசி நாளான விஜயதசமி அன்று இங்கு
அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்
செய்யப்பட்டு சிறப்பான நெய் குள தரிசன
உற்சவம் நடைபெறுகின்றது. இந்த உற்சவத்தில்
கலந்துகொண்டு நெய் குள தரிசனம் காணும்
பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது
ஐதீகம்.

பண்டாசுரனை வதம் செய்த அம்பிகை
அந்தப் பாவத்தினை தீர்த்துக் கொள்ள
சாந்தநாயகியாக வலது காலை மடித்து
வைத்துக்கொண்டு இடது காலை தரையில்
வைத்து தவம் மேற்கொள்கிறார். அவ்வாறு
தவம் மேற்கொள்ளும் பொழுது அம்பாளின்
திருமுகத்திலிருந்து தோன்றிய ஸ்தோத்திரங்களை
அம்பிகையின் கட்டளையின் பேரில் வாக்
தேவிகளான வாசினி, காமேஸ்வரி, அருணா,
விமலா, ஜெயனி, மோதினி, சர்வேஸ்வரி, மற்றும்
கௌலினி ஆகிய எட்டு பேர்களால் இயற்றப்பட்டதாக
கூறப்படுகிறது.

இந்த சகஸ்ர நாமமானது மகாவிஷ்ணுவின்
அவதாரமான ஸ்ரீ ஹயக்ரீவரால், சித்தர்களின் குருவாக
விளங்கும் ஸ்ரீ அகத்திய மாமுனிவருக்கு
உபதேசிக்கப்பட்டு அவர் மூலம் காஞ்சிபுரம்
ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத் தில் அனைவருக்கும்
உபதேசிக்கப்பட்டது.

இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் ஓதுபவருக்கு
எம பயம் நீங்கி குழந்தை பேரு, திருமண வரம்,
கிரக தோஷ நிவர்த்தி, வியாபார அபிவிருத்தி மற்றும்
ஆனந்தமான நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை
அனைவரும் பாராயணம் செய்து நன்மைகள்
பெறுவோமாக! நன்றி வணக்கம்.

Related Articles

Back to top button
Close