Thiruvaiyaru

நாகப்பட்டினம்-திருப்புகலூர் ஸ்ரீ அக்னிபுரீஸ்வரசுவாமி ஆலயம் | Thirupugalur Sri Agnipureeswarar Temple

நாகப்பட்டினம் | திருப்புகலூர் | ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் | வழிபாடு #6 | திருவையாறு

Nagapattinam | Thirupugalur | Sri Agnipureeswarar Temple | Vazhipadu #6 | Thiruvaiyaru

தேதி : 04.11.2024

நடை திறக்கப்படும் நேரம் :

காலை : 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை : 4.00 மணி முதல் 9.00 மணி வரை

#thiruvaiyaru #nagapattinam #thirupugalur #agnipureeswarar #vazhipadu6 #திருவையாறு #வழிபாடு #நாகப்பட்டினம் #திருப்புகலூர் #அக்னிபுரீஸ்வரர் #வழிபாடு6

Google Map Location : https://maps.app.goo.gl/s8w4Mr35pk9wgynAA

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்புகலூர் ஸ்ரீ கருத்தார் குழலி அம்பாள் சமேத ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் சுவாமி ஆலயம். இத்திருக்கோவிலை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோ முழுமையாக காணுங்கள்.

இத்திருக்கோவில் கும்பகோணத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ரயிலில் வருபவர்கள் நன்னிலம் ரயில் நிலையத்தில் இறங்கி வந்தடையலாம்.தற்போது இக்கோவில் திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இத்தலம் அப்பர், சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று, தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 75 ஆவது தலமாகவும், தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 138 ஆவது தலமாகவும் விளங்குகிறது.

இல்வலன் மற்றும் வாதாபி என்ற இரு அரக்கர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சம் புகுந்த ஊர், ஆதலால் திருப்புகலூர் என்று பெயர் பெற்றது.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பாக மூலவர் சன்னதியில் திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரீ மனோன்மணியம்மை சமேத ஸ்ரீ வர்த்தமானீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 76-வது தலமாகவும், தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 139வது தலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பாடல் பெற்ற ஸ்தலத்தில் உள்ளே மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் அமைக்கப் பெற்றுள்ளது இங்குள்ள சிறப்பாகும்

ஐந்துநிலை ராஜ கோபுரத்துடன் அமைக்கப் பெற்றுள்ள இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் உள் கோபுரம், பலிபீடம், கொடிமரம், நந்தி பகவான் அமைக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் சில காலம் திருஞான சம்பந்தர் உடன் இத்தலத்தில் உழவாரம் செய்ததாலும், சித்திரை மாதம் சதய நட்சத்திரம் அன்று இத்தலத்தில் முக்தி அடைந்ததை குறிப்பிடும் வகையில் மூலவர் சன்னதிக்கு அருகில் திருநாவுக்கரசருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆலயத்தின் திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர், திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோர் சன்னதிகள் உள்ளன. அதன் அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாணாசுரன் என்ற அசுரன் சிவபக்தையான தனது தாயின் மனம் மகிழ்விப்பதற்காக அவள் பூஜை செய்ய தினமும் பூலோகத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து கொடுப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் திருப்புகலூர் கோவிலுக்கு வந்து சிவலிங்கத்தை தூக்க முயன்ற போது அவனால் முடியவில்லை. அதனால் கோவிலை சுற்றி பள்ளம் தோண்டி மொத்தமாக கோவிலை தூக்க முற்பட்டான். ஆனால் அதற்கு மாறாக சுற்றிலும் நீர் தோன்றியது.

இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர். ஒருமுறை அக்னி பகவானுக்கும் வாயு பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வாயு பகவான் தன் மகனான அக்னி பகவானுக்கு “அக்னியே நீ எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும், நீ என் மகன்தான். பஞ்ச பூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். ஆதலால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக” என சாபம் அளிக்கிறார்.

இதைக் கேட்டு அக்னி பகவான் அவ்வாறே சோழ நாட்டிற்கு சென்று புன்னாக வனத்தில் நடுவில் அமைந்திருக்கும் சுயம்பு வடிவான சிவலிங்கத்தை பூஜை செய்து வருகிறார். இவரின் வழிபாட்டில் மெச்சிய சிவபெருமான் இவர் முன் சந்திரசேகரர் ரூபத்தில் தோன்றி சாப விமோசனம் அளிக்கிறார்.
நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட்ட போது.

அம்பாள் இவ்வாலயத்தில் கருந்தார்குழலி என்ற திருநாமத்தோடு தெற்கு நோக்கிய முகமாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். தன்னுடைய பக்தை ஒருவரின் மகளுக்கு பிரசவம் பார்க்க மருத்துவச்சி ரூபத்தில் வந்ததால் சூளிகாம்பாள் என்ற பெயரும் உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக இந்த பகுதியில் பிரசவத்தினால் இறப்புகளே நேர்ந்தது இல்லை என்பது நம்பிக்கை.

மேலும் இத்தலத்தில் இறைவன் அக்னிக்கு அருள் செய்ததால் உணவகம் தேநீர் கடை போன்ற நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வழிபட தொழில் மேம்படும்.

பித்ரு தோஷம் மட்டுமன்றி கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலத்திற்கும் ஏற்ற தோஷ நிவர்த்தி தலமாகவும் கருதப்படுகிறது.

இக்கோவிலின் முக்கிய விழாக்களாக வைகாசி மாதம் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக 10 நாட்கள் நடைபெறுகிறது. அதில் முக்கிய விழாவாக ஸ்ரீ சந்திரசேகரர், அக்னீஸ்வரருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதை அடுத்து சித்திரை மாதம் திருநாவுக்கரசருக்கு பக்த உற்சவம் இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறுகிறது. அதில் திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தினமான சித்திரை சதய விழா விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

இக்கோவில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களை பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்.

Exit mobile version