நல்லசிவம் சிந்தனை மேடை – இசை | பழனி முத்தமிழ் முருகன் மாநாடு | Nallashivam | Isai | Thiruvaiyaru
பழனி | அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு | நல்லசிவம் சிந்தனை மேடை – இசை | திருவையாறு
#thiruvaiyaru #dharumai_adheenam #palani #muthamizh #maanadu #murugan #aadheenam #speech #தருமை #ஆதீனம் #திருவையாறு #தருமை_ஆதீனம் #நல்லசிவம் #பழனி #முருகன் #முத்தமிழ் #மாநாடு #ஆதீனம் #ஆசியுரை #திருவையாறு #tamil #தமிழ்
Date: 24-08-2024
முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம்
உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.