Videos

திருவாரூர்-விஜயபுரம் ஸ்ரீ தங்கமுத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் காலம்-1 | Kumbabishekam Kaalam-1

Thiruvarur | Vijayapuram | Sri Thangamuthu Mariyamman Temple | Maha Kumbabishekam | Kaalam – 1 | Thiruvaiyaru

திருவாரூர் | விஜயபுரம் | ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் ஆலய | மகா கும்பாபிஷேகம் | காலம் – 1 | திருவையாறு

Date: 13-02-2025

#thiruvaiyaru #dharumai_aadheenam #thiruvarur #thangamuthu #mariyamman #temple #kumbabishekam #kaalam1 #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #விஜயபுரம் #தங்கமுத்து #மாரியம்மன் #காலம்1

Notes :

மாரியம்மன் ஆலயங்களில் மிக பழமையானதும்,புகழ்பெற்ற ஆலயமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் விஜயபுரம் அருள்மிகு தங்கமுத்து மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வரும் 16.2.25அன்று நடைபெறுவதை ஒட்டி இன்று யாகபூஜைகள் வெகு விமரிசையாக தொடங்கின.
இதையொட்டி ஆலய மகாமண்டபத்தில் வினாயகர் பூஜை,கும்ப அலங்காரம் நடைப்பெற்று மூலவர் தங்கமுத்துமாரியம்மன் கடத்தில் ஆவாகரணம் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து மல்லாரி இசையுடன் கடங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து ஆலய வலம் வந்து யாகசாலையில் எழுந்தருளசெய்தனர்.
பின்னர் வண்ணமலர்களால் கடங்கள் அலங்காரம் செய்யப்பட்டு முதல்கால யாகபூஜை தொடங்கி நடைப்பெற்றது. யாகத்தில் பல்வேறு வகையான திரவியங்கள் ,பட்டு புடவை போடப்பட்டு மகாபூர்ணாஹீதிநடைப்பெற்று தீபாரதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close