Thiruvaiyaru

திருவாரூர் – திருமீயச்சூர் ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயம் | Sri Meganatha Swamy Temple | Thiruvaiyaru

திருவாரூர் | திருமீயச்சூர் | ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயம் | வழிபாடு #3 | திருவையாறு

Thiruvarur | Thirumeeyachur | Sri Meganatha Swamy Temple | Vazhipadu #3 | Thiruvaiyaru

தேதி : 14.10.2024

#thiruvaiyaru #Thiruvarur #Thirumeeyachur #Lalithambigai #Meganatha #narashimha #perumal #vazhipadu2 #2 #திருவையாறு #திருவாரூர் #ஸ்ரீமேகநாதசுவாமி #திருமீயச்சூர் #லலிதாம்பிகை

Google Map Location : https://maps.app.goo.gl/yEFjXz2vryRnRsf38

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை உடனாகிய ஸ்ரீ மேகநாத சுவாமி ஆலயம். இத்திருக்கோவிலை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோ முழுமையாக காணுங்கள்.இத்திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் பேரளம் என்ற ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ரயிலில் வருபவர்கள் பேரளம் ரயில் நிலையத்தில் இறங்கி வந்தடையலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திருக்கோவில் சோழர் காலத்தில் கட்டப் பெற்று ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்டவை. தற்போது இக்கோவில் திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்று, தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 56 ஆவது தலமாகவும், தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 119 ஆவது தலமாகவும் விளங்குகிறது.

அதை எடுத்து மற்றொரு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது எதிரே உள்ள பிரகாரச் சுவற்றில் விஸ்வநாதர் சன்னதி அமைந்துள்ளது. மேகநாதர் சன்னதியின் இடது புறமாக, சகலபுவனேஸ்வரர் சன்னதி உள்ளது. அச்சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர், மின்னும் மேகலை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது. சகலபுவனேஸ்வரருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. நடராஜர், பைரவர், சூரியன், ஆகாசலிங்கம், வாயுலிங்கம் ஆகியோர் உள்ளனர்.

இரண்டாவது கோபுரத்தை கடந்து உள்ளே செல்லும் பொழுது பலிபீடமும் நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி சிலையும், சேத்திர புராணேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்ற சிவபெருமான் அம்பாளை சாந்தப்படுத்துகின்ற ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து தெற்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தி சன்னதியும், மூலவர் சன்னதிக்கு பின் அமைக்கப்பட்டுள்ள பிரகாரத்தில் தேயுலிங்கம் விநாயகர் அதை எடுத்து இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், வருணலிங்கம், நிருத்விலிங்கம், ஈசான லிங்கம், பிரித்திவிலிங்கம் சித்தி விநாயகர், மகாலட்சுமி ஆகிய தெய்வங்களின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோவிலின் மூலவர் சூரிய பகவான் மற்றும் அருணனால் வழிபட பெற்றதால் மிஹிரா அருணேஸ்வரர் என்ற வடமொழி பெயராலும், திருஞானசம்பந்தரால் மீயச்சூர் மேவிய பெருமானே என்று பாடல் பெற்றதால் முயற்சி நாதர் என்றும், இந்திரன் வழிபட்டதால் ஸ்ரீ மேகநாத சுவாமி என்ற திரு பெயர்களை பெற்றுள்ளார். இக்கோவிலின் வலது புறத்தில் ஸ்ரீ லலிதாம்பிகை அம்பாளுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அம்பிகை வழிபாட்டிற்குரிய திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இத்தலம் கருதப்படுகிறது. ஏனெனில் பண்டாசுரனை வதம் செய்து, அந்த சாபத்தை தீர்த்துக் கொள்ள சாந்த நாயகியாக வலது காலை மடித்து இடது காலை தரையில் வைத்து தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்திருக்கிறார் அம்பாள். இத்தகைய தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் பொழுது அம்பாளுடைய திருமுகத்தில் தோன்றிய ஸ்தோத்திரமாக ஸ்ரீ ஹயக்ரீவரால் அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்யப்பட்ட ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம் ஆகும்.இக்கோவிலின் உள்பிரகாரத்தில் தெற்குப் பக்கத்தில் சேத்திர புராணேஸ்வரர் என்கின்ற மிகச்சிறந்த கலை படைப்பு அமைக்கப்பட்டுள்ளது.அந்த நன்னாளில் அம்பாள் சன்னதிக்கு முன்னால் 15 அடி நீளம் மற்றும் நான்கு அடி அகலத்திற்கு வாழை இலைகளை பரப்பி சுற்றிலும் தென்னை மட்டை வைத்து தடுப்பு அமைக்கிறார்கள். பிறகு அதை மூன்று பகுதிகளாக பிரித்து முதல் பகுதியில் சர்க்கரை பொங்கலும் இரண்டாம் பகுதியில் புளியோதரையும் மூன்றாம் பகுதியில் தயிர் சாதமும் நிரப்பப்படுகிறது. முதல் பகுதியில் உள்ள சர்க்கரைப் பொங்கலின் நடுவே பள்ளம் அமைத்து அதில் அதிக அளவு நெய்யை நிரப்பி குளம் போல் காட்சி அளிக்க செய்கின்றார்கள். அதன் பிறகு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று திரையை விலக்கும் போது அம்பிகையின் திருமுகத்தை அந்த நெய் குளத்தில் தரிசனம் செய்ய வேண்டும். இந்த நெய் குளத்தில் அம்பாளின் முகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

இக்கோவிலின் முக்கிய பரிகாரமாக கருத்து வேற்றுமையாலும் இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதிகள் இத்தல இறைவனை வழிபட நன்மை பிறக்கும். மேலும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் கொடிய நோய்கள் கிரக தோஷங்கள் ஆகியவை நிவர்த்தி பெரும். சூரியன் வழிபட்டு அவருக்கு புராணத்தில் கருடன், அருணன், வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்த தலம் ஆதலால் இங்கு எம பயம் நீங்க, ஆயுள் விருத்தி பெற சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மேலும் ரதசப்தமி அன்று இங்கு வந்து வழிபட ஏழேழு ஜென்மங்கள் பெற்ற சாபங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். சூரியன் இங்கு வந்து வழிபட்ட ஐதீகத்திற்கு இணங்க சித்திரை மாதம் 21 ஆம் நாள் தொடங்கி 7 நாட்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவனின் மீது படுவது இங்குள்ள சிறப்பாகும்.

இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களை பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்.

Exit mobile version