திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலய ஐப்பசி மாத பிரதோஷம் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
🌺🙏 Tiruvannamalai Sri Arunachaleswarar Temple Aippasi Pradosham Special Abhishekam & Aaradhanai for Periya Nandi Bhagavan | திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலய ஐப்பசி மாத பிரதோஷம் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை🙏🌺
குறிப்பு:
திருவண்ணாமலை ஐப்பசி மாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…..
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம்…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ தினமான இன்று ஐந்தாம் பிரகாரம் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.
ஐப்பசி மாத பிரதோஷமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு மஞ்சள் தூள், வீபூதி, குங்குமம், அபிஷேக தூள், சீயக்காய் தூள், இளநீர், தேன், தயிர், சந்தனம், கரும்பு சாறு மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சாமந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா, கோழிகொண்டை, வில்வ இலை, தவணம், வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வண்ண வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.🙏
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம் : திருவண்ணாமலை.
📅 தேதி : 06.11.2026
👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@UCrT-6SNpVztUc9teW4JH2Mw
#திருவண்ணாமலை #ஸ்ரீஅண்ணாமலையார் #அண்ணாமலையார்ஆலயம் #ஐப்பசிமாதம் #ஐப்பசிபிரதோஷம் #பிரதோஷவழிபாடு #பெரியநந்திபகவான் #நந்திபகவான் #சிறப்புஅபிஷேகம் #அபிஷேகஆராதனை #சிவபெருமான் #சிவதரிசனம் #ஆன்மிகம் #Tiruvannamalai #SriArunachaleswarar #AippasiPradosham #Pradosham #PeriyaNandiBhagavan #NandiBhagavan #SpecialAbhishekam #AbhishekamAaradhanai #LordShiva #TempleDarshan