Thiruvaiyaru

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் ஆறாவது நாள் மாலை தங்க தேரோட்டம் | திருவையாறு

திருப்பதி | ஸ்ரீ ஏழுமலையான் கோவில் | பிரம்மோற்சவ ஆறாவது நாள் மாலை | தங்க தேரோட்டம் | திருவையாறு

Tirupati Sri Ezhumalaiyan Temple | Bramorchava Day 6 Evening Thanga Therottam | Thiruvaiyaru

#திருப்பதி #Tirupati #தரிசனம் #Dharisanam #தரிசனம் #ஏழுமலையான் #hindutemple #மலையப்பசாமி #பெரியசேஷ #பிரம்மோற்சவம் #tirupatistatus #thiruppathi #aadheenam #dharumai_adheenam #தருமை_ஆதீனம் #ஆதீனம்

Date : 08.10.2024

Notes :

திருப்பதி:

ஏழுமலையான் கோவில் கருட வாகன புறப்பாடு

மூன்று லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் வழிபாடு.

திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளான இன்று மாலை ஆறரை மணிக்கு துவங்கி கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை மோகினி அலங்கார புறப்பாடு நடைபெற்ற நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன புறப்பாட்டை கண்டு தரிசிக்க சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர்.

ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மட்டுமே காத்திருந்து வழிபட முடியும் என்ற நிலையில் மதியம் மாடவீதிகளில் உள்ள அனைத்து கேலரிகளும் பக்தர்களால் நிறைந்து விட்டது.

எனவே கேலரிகளுக்குள் பக்தர்களை அனுப்பி வைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேலரிகளில் இடம் கிடைக்காத சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மற்ற இடங்களில் காத்திருக்கும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் தன்னுடைய ஊழியர்கள் மூலமும் ஸ்ரீவாரி சேவை இயக்கத்தின் சேவையாளர்கள் மூலமும் செய்து கொடுத்து வருகிறது.

அதிக அளவிலான பக்தர்கள் ஒரே நாளில் வந்திருக்கும் காரணத்தால் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த தேவஸ்தான நிர்வாகம் 5 ஆயிரம் போலீசார், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் 2500 ஊழியர்கள் ஆகியோர் உட்பட சுமார் 8000 பேரை பாதுகாப்பு பணிகளில் நியமித்துள்ளது.

திருப்பதி திருமலை இடையே வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் காரணத்தால் உள்ளூர் டாக்ஸிகளுக்கு நாளை காலை வரை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அதிக அளவிலான பேருந்துகள் திருப்பதி திருமலை இடையே செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version