Thiruvaiyaru

திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தி பாடல்கள் பாடி மனதை கவர்ந்த 7-வயது சிறுமி தியா

Thiruthaṇi | Sri Subramaniya Swamy Temple | 7 Year Old Girl Dhiya Singing Devotional Song | Thiruvaiyaru

திருத்தணி | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் | பக்தி பாடல்கள் பக்தர்களின் மனதை கவர்ந்த 7-வயது சிறுமி தியா | திருவையாறு

#thiruvaiyaru #dharumai_adheenam #Dhiya #muthamizh #maanadu #murugan #Thiruthaṇi #Subramaniyaswamy #DevotionalSong #Devotional #திருவையாறு #திருத்தணி #திருவள்ளூர் #பழனி #முருகன் #முத்தமிழ் #மாநாடு #பக்திபாடல்கள் #திருக்கோயில்

Date: 09-09-2024

Notes :

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் பாடி பக்தர்களின் மனதை கவர்ந்த சென்னையை சேர்ந்த 7-வயது சிறுமியைப் பாராட்டிய திருக்கோயில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

திருத்தணி-செப்டம்பர்-8

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-படை திருக்கோயில் ஆகும்

இந்த திருக்கோயிலில் சென்னையை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 7-வயது தியா என்ற பெண் குழந்தை தனது பெற்றோர்களுடன் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்திருந்தார்.

இந்த குழந்தை திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் மலை மீது சாமி தரிசனம் செய்யும்போது சாமிக்கு முன்பு முருகப்பெருமானின் பக்தி இன்னிசை பாடல்களை அற்புதமாக அழகான, குரலில் , சுருதி மாறாமல் கணீர் குரலில் முருகப்பெருமான் பாடல் பாடினார்

இந்தப் பாடலை பாடும் பொழுது பக்தர்கள் மெய் மறந்து சிறுமி பாடுவதை கேட்டு ரசித்தனர்

திருக்கோயில் முருகப்பெருமாள் சன்னதி முன்பு சிறுமையின் இந்த முருகப்பெருமான் பக்தி பாடல்கள் பாடி அசத்திய இந்த சிறுமி இவருக்கு

திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் ;- வி. சுரேஷ்பாபு

சிறுமி தீயா விற்கு பொன்னாடை அணிவித்து, மலர்மாலை அணிவித்து, பிரசாதங்களை வழங்கி பாராட்டினார்

முருக பக்தர்களும் சிறுமிக்கு கை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்

இந்த சிறுமி இதுவரை முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் பக்தி பாடல்களை பாடி அசத்தியுள்ளார்

மேலும் 55 கச்சேரிகளிலும் இந்த 7-வயது சிறுமி அருமையான தெய்வப் பாடல்கள் பாடி பொதுமக்கள் பாராட்டுகளையும் தனக்கென ரசிகர் பட்டாளங்களையும் வைத்துள்ளார்

இந்த சிறுமிக்கு மேலும் ஒரு சிறப்பாக சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம்

பழனியில் முருகன் முத்தமிழ் மாநாட்டில் இந்த சிறுமி தியா மேடையில் முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் பாடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆன்றோர்களையும் சான்றோர்களையும் பாராட்டும் வண்ணம் செயல்பட்டார்

மேலும் அருமையான குரலில் முருகப்பெருமான் பக்தி பாடல்களை பாடியதால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இவரை இந்த குழந்தை தியா வை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது….

திருத்தணியில் முருகப்பெருமான் சன்னதியில் இந்த குழந்தை பக்தி பாடல்கள் பாடி கோயிலில் மெய் மறந்து பக்தர்கள் இந்த பாடல்களை கேட்டு குழந்தையை பாராட்டிய சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது….

Exit mobile version