Thiruvaiyaru

தஞ்சாவூர்-வடக்குரங்காடுதுறை ஶ்ரீ ஜெகத்ரக்ஷகப்பெருமாள் ஆலயம் | Sri Jagatrakshaka Perumal Temple

தஞ்சாவூர் | வடக்குரங்காடுதுறை | ஶ்ரீ ஜெகத்ரக்ஷகப் பெருமாள் ஆலயம் | வழிபாடு #4 | திருவையாறு

Thanjavur | Vadakurangaduthurai | Sri Jagatrakshaka Perumal Temple | Vazhipadu #4 | Thiruvaiyaru

தேதி : 21.10.2024

நடை திறக்கப்படும் நேரம் :

காலை : 7.30 மணி முதல் 12.30 மணி வரை
மாலை : 4.30 மணி முதல் 8.30 மணி வரை

#thiruvaiyaru #Vadakurangaduthurai #thanjavur #Jagatrakshakaperumal #perumal #vazhipadu4 #4 #திருவையாறு #பெருமாள்வழிபாடு #ஜெகத்ரக்ஷகப்பெருமாள் #வல்லம் #பெருமாள்பக்தி #வழிபாடு4 #4

Google Map Location : https://maps.app.goo.gl/XmyYmuwaYywWaCtG9

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வழிபாடு நிகழ்ச்சியில் நாம் தரிசிக்கவிருக்கும் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் வடக்குரங்காடுதுறை என்ற ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஶ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் ஆலயம். இத்திருக்கோவிலை பற்றிய முழு தகவல்களை அறிய வீடியோ முழுமையாக காணுங்கள்.

இக்கோவில் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் வட குரங்காடுதுறை என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவையாற்றில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அய்யம்பேட்டை என்ற ஊரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இவ்வாலயம். ரயிலில் வருபவர்கள் அய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி இங்கு வந்தடையலாம்.

இக்கோவில் கடந்த எட்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகவும் பின்னர் விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்க மன்னர்களால் புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் ஒரு காலத்தில் காவிரியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் இக்கோவில் மணலால் மூழ்கடிக்கப்பட்டு மணல்மேடானது. இந்த விஷயத்தினை மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் கனவில் தோன்றி பெருமாள் கூறியதாகவும், பின்னர் ராணி மங்கம்மாள் இக்கோவிலை சரி செய்து மீண்டும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.தற்பொழுது இந்த கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் திருமங்கை ஆழ்வாரால் பெரிய திருமொழியில் 10 பாசுரங்கள் அருளி செய்யப்பட்ட சோழ நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. மங்களா சாசனம் பெற்று தலங்களில் இது எட்டாவது தலமாகும்.

நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து இங்குள்ள இறைவனை வழிபட்டதால் இவ்வூர் திருக்கூடலூர் என்று அழைக்கப்படுகின்றது. திருக்கூடலூர் திவ்ய தேசம் என்று பிரம்மாண்ட புராணம் மற்றும் பத்ம புராணம் இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.காவிரி இத்தலத்திற்கு ஒன்றாக வந்து இழந்த பொலிவை மீண்டும் பெற்றதால் இத்தலம் சங்கம சேத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.

ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அமைக்க பெற்றுள்ள இக்கோவிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம் கொடிமரம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதைத் தொடர்ந்து கருடாழ்வாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து கோவில் பிரகாரத்தில் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார், ஸ்ரீ ஆள வந்தார், ஸ்ரீ மணவாள மாமுனிவர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ திருமங்கையாழ்வார், ஸ்ரீ நம்மாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற காவிரி நதி, இக்கோவிலின் ஸ்தல விருட்சம் பலாமரம். கடந்த 2003 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவின் திருப்பணிகள் நடைபெறும் பொழுது இக்கோவிலில் தலவிருட்சம் பட்டு போனதால் அது கீழே விழுந்தால் சன்னதி பாழாகிவிடும் என்ற காரணத்தினால் அதை வெட்டி மீண்டும் ஒரு புதிய மரமாக அதில் இருந்து ஒரு கிளையை மட்டும் எடுத்து புதைத்து வைத்துள்ளனர். அது மிகப்பெரிய மரமாக வளர்ந்து அதில் சங்கு போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

இக்கோவிலின் தாயார் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரீ மலர்மங்கை நாச்சியாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிதேவியுடன் சண்டையிட்டு அவரை ஏழு சமுத்திரத்திற்கு கீழ் உள்ள பாதாளத்திற்கு கொண்டு செல்ல முப்பத்து முக்கோடி தேவர்களும் பெருமாளிடம் வந்து முறையிடுகின்றனர். அவர்களின் வழிபாட்டுக் கிணங்க பெருமாள் இத்தலத்தில் பூமிக்குள் நுழைந்து அசுரனை அழித்து பூமி தேவியை மீட்டு அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீ லட்சுமி தேவியுடன் வராக அவதாரம் என்கின்ற பன்றி ரூபத்தில் காட்சியளிக்கிறார். இந்த நிகழ்வினால் திருமங்கையாழ்வார் “புகுந்தான் ஊர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பரீஷ மன்னன் விஷ்ணு வழிபாட்டில் மூழ்கி இருந்த பொழுது அந்த வழியாக வந்த துர்வாச முனிவரை கவனிக்க தவறி விடுகிறார். இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர் மன்னருக்கு சாபம் அளித்து விட, மன்னர் இது குறித்து பெருமாளை வழிபட, பெருமாள் தன்னுடைய சக்கரத்தை ஏவி முனிவரை தொடர செய்கிறார். இக்கோவிலின் முக்கிய விழாக்களாக வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு வைகாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது, அதை அடுத்து ஐப்பசி மாதத்தில் ஐப்பசி பவித்ரோத்சவம் நடைபெறுகின்றது. நவராத்திரி விழாவின் பொழுது தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அதை அடுத்து ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மாதம்தோறும் பௌர்ணமி நாட்களில் 108 தாமரை இலைகளால் ஸ்ரீசுக்த ஹோமம் இக்கோவிலில் நடைபெறுகின்றது.

இவ்வாலயத்திற்கு அனைவரும் வந்து இறைவனை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம். மீண்டும் ஒரு சிறப்பான திருக்கோவில் வழிபாட்டில் உங்களை சந்திக்கின்றோம் நன்றி வணக்கம்

Exit mobile version