Thiruvaiyaru

தஞ்சாவூர் பழமுதிர்ச்சோலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயம் 6ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024

தஞ்சாவூர் | பழமுதிர்ச்சோலை | வடக்கு வீதி வடக்கு அலங்கம் | ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயம் | 6ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024 | திருவையாறு

Thanjavur | Pazhamuthircholai | North Road North Alangam | Sri Balathandayuthapani Swamy Temple | 6th Padaiveedu | Kandha Sasti Vizha 2024 | Thiruvaiyaru

தேதி : 07.11.2024

#thiruvaiyaru #Tiruttani #Keezavasal #Kurichi #subramaniyaswamy #6 #kandha_sasti #2024 #திருவையாறு #பழனி #சுப்ரமணியசுவாமி #ஆறுபடைவீடு #கந்தசஷ்டி #2024 #murugan #முருகன் #சுப்பிரமணியசுவாமிகோவில்

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளான இன்று அறுபடை வீடுகளில் ஆறாம் கோவிலான தஞ்சாவூர் பழமுதிர்ச்சோலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தினை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.

இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வீதி வடக்கு அலங்கத்தில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில், இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில், அவருடைய முதல் அமைச்சர் பாதயாத்திரைக்காக மாதந்தோறும் கார்த்திகை அன்று பழனி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் மன்னரின் பணி பாதிக்கப்படவே, அவர் தஞ்சையிலேயே ஒரு கோயில் எழுப்பும்படி அமைச்சருக்கு ஆணை இடுகிறார். இதைக் கேட்டு மனம் வருந்திய அமைச்சர் வருந்திய அந்த கவலையிலேயே உறங்கிப் போனார். அவருடைய கனவில் தோன்றிய முருகப் பெருமான் தன்னுடைய விக்ரகம் ஒன்று பழனி மலை அடிவாரத்தில் உள்ளது. அதை எடுத்து வந்து இந்த கோயில் எழுப்புமாறு அறிவுறுத்தினார். கனவு கலைந்த உடனே பழனி புறப்பட்டு சென்ற அமைச்சரின் ஆச்சரியத்திற்கு இணங்க அங்கு, கனவில் கூறியது போலவே ஒரு முருகன் சிலை கிடைத்தது. அதை தஞ்சாவூர் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக தகவல்கள் கூறுகின்றது. 

இவ்வாலயம் அமைந்துள்ள இடம், மன்னர்கள் காலத்தில் முதலைகளுக்கு தீவனம் வைக்கும் கொட்டகையாக இருந்துள்ளது. எதிரிகள் தஞ்சை நகருக்குள் நுழையாமல் இருக்க அகழிகளை உருவாக்கியிருந்தனர். அதற்குள் பல முதலைகளை வளர்த்து வந்தனர். அந்த முதலைகளுக்காக ஒரு மண்டபத்தில் தீவனம் வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில்தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாலயத்தின் மூலவர் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக காட்சியளிக்கின்றார். பழனியை போன்று இவ்வாலயம் தோற்றம் கொண்டிருந்தாலும், தஞ்சாவூரில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா, தைப்பூச விழா, கார்த்திகை தீப விழா மற்றும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் முத்து பல்லக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

வேறு எங்கும் காணாத தனி சிறப்பாக இவ்வாலயத்தில் ஆண்டுதோறும்  மாசி மாதம் 11, 12, 13 ஆகிய தினங்களில் மாலை வேலையில் சூரிய பூஜை நடைபெறுகின்றது.

இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தினை கந்த சஷ்டி விரத நாளில் வழிபட்டு கந்த கடவுளின் அருளை பெற்று உய்வோமாக! நன்றி வணக்கம்!

Exit mobile version