தஞ்சாவூர் – திருப்பரங்குன்றம் | ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயம் | 1 ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024
தஞ்சாவூர் | திருப்பரங்குன்றம் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் | 1 ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024 | திருவையாறு
Thanjavur | Thiruparankundram | Sri Subramania Swamy Temple | 1st Padaiveedu | Kandha Sasti Vizha 2024 | Thiruvaiyaru
தேதி : 02.11.2024
#thiruvaiyaru #thiruparankundram #subramanian_swamy #aarupadaiveedu #6 #kandha_sasti #2024 #திருவையாறு #திருப்பரங்குன்றம் #சுப்பிரமணியசுவாமிகோவில் #ஆறுபடைவீடு #6 #கந்தசஷ்டி #2024
Google Map Location : https://maps.app.goo.gl/MQMpp7MNjanrYmjYA
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று அறுபடை வீடுகளில் முதல் கோவிலான தஞ்சாவூர் திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தினை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் மேலவீதி மேல அலங்கத்தில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இக்கோவில் மராட்டிய மன்னன் ஆன பிரதாப சிம்மன் என்ற மன்னரால் 1757 ஆம் ஆண்டு குழந்தை வரம் வேண்டி பூஜிப்பதற்காக கட்டப்பட்டது. சுமார் 250 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலில் மராட்டிய மற்றும் நாயக்க மன்னர்கள் போருக்கு செல்லும் முன் இங்கு வந்து ஆயுதங்களை வைத்து இறைவனை வழிபட்டு செல்வது வழக்கம். தற்போது இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இவ்வாலயத்தின் மூலவர் மலை மீது அமர்ந்திருப்பது போன்ற உயரமான இடத்தில் இருப்பதால், இக்கோவில் திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள மூலவர் வள்ளி தெய்வானை சமேதராக திருமண கோலத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கின்றார்.
ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி, ஸ்ரீ சிவலிங்கம் ஆகியோரின் திரு உருவங்கள் காணப்படுகின்றன.
கோவிலின் முக்கிய பிரார்த்தனையாக சஷ்டி விரதம் மேற்கொண்டு இங்குள்ள முருகப்பெருமானை வழிபட குழந்தை பேறு விரைவில் கிட்டுவது நிச்சயம் என்பது நம்பிக்கை.
இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது கந்த சஷ்டி விழாவின் பொழுது சூரசம்ஹார நிகழ்ச்சியும் தஞ்சாவூர் மேல வீதியில் நடைபெறுகின்றது. மேலும் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்திலும் முருகனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. மேலும் ஆண்டுதோறும் முத்து பல்லுக்கு விழாவின் போது முருகப்பெருமான் வீதி உலா வந்து கோவிலில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றது
இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தினை கந்த சஷ்டி விரத நாளில் வழிபட்டு கந்த கடவுளின் அருளை பெற்று உய்வோமாக! நன்றி வணக்கம்!