தஞ்சாவூர் | திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம் | 2 ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024 | திருவையாறு
Thanjavur | Thiruchendur | Sri Subramania Swamy Temple | 2nd Padaiveedu | Kandha Sasti Vizha 2024 | Thiruvaiyaru
தேதி : 03.11.2024
#thiruvaiyaru #thiruchendur #subramanian_swamy #aarupadaiveedu #6 #kandha_sasti #2024 #திருவையாறு #திருச்செந்தூர் #சுப்பிரமணியசுவாமிகோவில் #ஆறுபடைவீடு #6 #கந்தசஷ்டி #2024
Google Map Location : https://maps.app.goo.gl/yZQfno25PPjDcNEf9
குறிப்பு :
அனைவருக்கும் வணக்கம்! கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான இன்று அறுபடை வீடுகளில் இரண்டாம் கோவிலான தஞ்சாவூர் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தினை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் பூக்கார தெருவில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கடந்த 1857 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் வாழ்ந்த துறவி ஒருவர் ஐம்பொன் சிலை வடிவிலான முருகப்பெருமானை வைத்து தினசரி பூஜை செய்து வந்தார். துறவியின் வயோதிகம் காரணமாக அவருடைய வாழ்நாள் முடியப் போவதை எண்ணி தான் வழிபட்டு வந்த முருகப்பெருமானை தனக்குபின் இந்த பூஜையை தினசரி தொடர்ந்து செய்வது யார் என்று வருந்தினார். அன்று அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான் அவரை அழைத்துக்கொண்டு ஒரு ரயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள ஒரு நபரிடம் அந்த சிலையை ஒப்படைக்க சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார். அதோடு கனவு கலைந்து விட, துறவி கனவில் வந்தது போல குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்திற்கு சென்று அந்த நபரை சந்தித்தார். அவரை சந்தித்து கனவில் நடந்ததை அவருக்கு விளக்கினார், சொல்லி வைத்தார் போலவே அந்த நபரும் தனக்கும் முன்தினம் அதேபோல் கனவில் முருகப்பெருமான் தோன்றிய விஷயத்தை கூற இருவரும் முருகப்பெருமானின் அருளை நெகிழ்ந்தனர். பின்னர் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் வந்த அந்த ரயில்வே ஊழியர் முருகன் தன் கனவில் கூறியது போல பூக்கள் நிறைந்த பூக்கார தெருவில் ஒரு குடில் அமைத்து தினசரி முருகனை வழிபட்டார். அதைத் தொடர்ந்து 1911 ஆம் ஆண்டு பக்தர்களின் உதவியோடு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. தற்போது இக்கோவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இவ்வாலயத்தின் மூலவர் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் காட்சியளிக்கின்றார். ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ காசி விஸ்வநாதர், ஸ்ரீ காசி விசாலாட்சி, நவகிரகங்கள் ஆகியோரின் திரு உருவங்கள் காணப்படுகின்றன.
இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது கந்த சஷ்டி விழாவின் பொழுது சூரசம்ஹார நிகழ்ச்சியும் தஞ்சாவூர் பூக்கார தெருவில் நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் தஞ்சாவூர் அமைந்துள்ள ஆறு படை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூச தினத்தன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்விக்கப்படுகின்றது. திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் எல்லா காரியங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தினை கந்த சஷ்டி விரத நாளில் வழிபட்டு கந்த கடவுளின் அருளை பெற்று உய்வோமாக! நன்றி வணக்கம்!