Thiruvaiyaru

தஞ்சாவூர் – சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் 4 ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024

தஞ்சாவூர் | சுவாமிமலை | ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம் | 4 ஆம் படைவீடு | கந்த சஷ்டி விழா 2024 | திருவையாறு

Thanjavur | Palani | Sri Balathandayuthapani Swamy Temple | 4th Padaiveedu | Kandha Sasti Vizha 2024 | Thiruvaiyaru

தேதி : 05.11.2024

#thiruvaiyaru #palani #subramanian_swamy #aarupadaiveedu #6 #kandha_sasti #2024 #திருவையாறு #பழனி #சுவாமிநாதசுவாமி #ஆறுபடைவீடு #6 #கந்தசஷ்டி #2024 #Palanimurugan #murugan #முருகன்

குறிப்பு :

அனைவருக்கும் வணக்கம்! கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான இன்று அறுபடை வீடுகளில் நான்காம் கோவிலான தஞ்சாவூர் சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயத்தினை தரிசிக்கலாம். இவ்வாலயத்தின் முழு தகவல்களை அறிய வீடியோவை முழுமையாக காணுங்கள்.

இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் ஆட்டு மந்தை தெருவில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் மூலவர் முருகப்பெருமான் சுவாமி மலையில் சன்னதி இருப்பது போலவே, இங்கும் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து கோவிலின் வடகிழக்கு மூலையில் தலவிருட்சமாக விளங்குகின்றது

ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ இடும்பன், ஸ்ரீ பிரகதீஸ்வரர், ஸ்ரீ பெரியநாயகி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நாகக்கன்னி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஐயப்பன், நவகிரகங்கள் ஆகியோரின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம்.

இக்கோவிலின் முக்கிய விழாக்களாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. இவ்விழாவின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. மேலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தினத்தன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூச தினம், முத்து பல்லக்கு விழா வெகு விமர்சையாக நடைபெறுகின்றது.

இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தினை கந்த சஷ்டி விரத நாளில் வழிபட்டு கந்த கடவுளின் அருளை பெற்று உய்வோமாக! நன்றி வணக்கம்!

Exit mobile version