
🪔🙏குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா – 9ஆம் நாள் அக்னி சட்டி தரிசனம் | Kulasekaranpattinam Sri Mutharamman Temple Dasara Festival – 9th Day Agni Chatti Dharisanam🌸🪔
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி.
🗓️ தேதி: 01 அக்டோபர், 2025.
🗒️குறிப்பு :
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா 9-ம் திருவிழாவான இன்று பெண்கள் அக்னி சட்டி எடுத்து அம்மன் அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடிய வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழா செப்டம்பர் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் திருவிழா கொடி ஏறியதும் திருகாப்புக் கட்டி தாங்கள் வேண்டிய வேடங்கள் அணிந்து ஊர் ஊராக குழுவாகவும் தனியாகவும் சென்று காணிக்கை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன்பதாம் திருவிழாவான இன்று கோவிலுக்கு ஏராளமான பெண்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்.
பெண்கள் அக்னி செட்டி எடுத்து ஆக்ரோஷமாக அம்மன் அருள் வந்து ஆடிய காட்சி கோவில் வளாகத்தையே மெய்சிலிர்க்க வைத்தது. இதனைப் பார்த்த பக்தர்கள் ஓம் காளி ஜெய் காளி என்ற பக்தி பரவச கோஷமிட்டனர்.
செங்காளி கருங்காலி உள்ளிட்ட பல்வேறு காளி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மன் அருள் வந்ததும் ஆக்ரோஷமாக சுத்தி ஆடிய காட்சி பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.
ஏராளமான பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து பக்தி பரவசத்துடன் வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். தசரா திருவிழா சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நாளை நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்
👍 விருப்பம் | 🔁 பகிருங்கள் | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்
🙏 ஆன்மிக பாரம்பரியத்தை உலகம் அறிய நம்மோடு இருங்கள்.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #குலசேகரன்பட்டினம்
#முத்தாரம்மன்
#தசரா_திருவிழா
#அக்னி_சட்டி_தரிசனம்
#திருவிழா
#அம்மன்_ஆலயம்
#Kulasekaranpattinam
#Mutharamman
#DasaraFestival
#AgniChattiDarisanam
#KulasekaranpattinamDasara
#MutharammanTemple