![](https://thiruvaiyaru.in/wp-content/uploads/2024/09/KfJfdVvSMAc.jpg)
அக்கரைவட்டம் | ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலய | கும்பாபிஷேகம் | திருவையாறு
Akkaraivattam| Sri Kottai Mariyamman Temple | Kumbabishekam | Thiruvaiyaru
#thiruvaiyaru #karaikal #akkaraivattam #mariyammankovil #kumbabishekam #dharumai_adheenam #poojai #thiruvizha #festival #திருவையாறு #தருமை_ஆதீனம் #காரைக்கால் #அக்கரைவட்டம் #மாரியம்மன் #கும்பாபிஷேகம் #யாகம் #பூஜை #திருவிழா
Date : 28.08.2024
Notes :
காரைக்கால் அடுத்த அக்கரைவட்டம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. கடந்த 26ம் தேதி அன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை 28ம் தேதி 4ம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மகா பூர்ணாஹதி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து ஆலயத்தை வலம் வந்து வேதமந்திரங்கள் முழங்க ஆலய விமானங்கள் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12ஆண்டுகள் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி என முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்து ஸ்ரீ கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
Full Video Link : https://youtu.be/KfJfdVvSMAc