Videos

🔴Live: சென்னை ஸ்ரீ அஷ்டலட்சுமி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் காலம் – 6 | Maha Kumbabishekam

🌺🙏 சென்னை பெசன்ட் நகர் ஸ்ரீ அஷ்டலட்சுமி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் – காலம் – 6 | Chennai Besant Nagar Sri Ashtalakshmi Amman Temple Maha Kumbabishekam – Kaalam – 6 🙏🌺.

🪔ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹா பெரியவா ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர மஹா ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் கட்டப்பட்ட திருக்கோயிலாது. இந்த நூற்றாண்டில் கட்டிடக் கலை வரலாற்றில் சிறப்பம்சங்களில் ஒன்றான அஷ்டாங்க விமானம் என்னும் அமைப்பில் ஒரே விமானத்தின் கீழ் எட்டு இலக்குமிகளுக்கும் தனித்தனியே சன்னதிகள் அமையா பெற்ற சிறப்பு பிரார்த்தனை ஸ்தலம் ஆகும்.

எட்டு இலக்குமிகளின் சக்திகளையும் ஒன்று சேர்த்து மகாலட்சுமி என்னும் வடிவாக்கி, கருவறையில், மகாவிஷ்ணுவுடன் திருமணக்கோலத்தில் காட்சிதரும் வகையில், வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள எழில்மிகு திருக்கோயில் பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி திருக்கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயிலாகும்.

அஷ்டாங்க விமானம் என்னும் பழமையாக திருமால் கோயில்களுக்கு உண்டான இரட்டை அடுக்கு முறையில் ஆகம விதிகளுக்குப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. பாஞ்சராத்திர ஆகம பூஜை நடைபெறும் இத்திருக்கோயிலில் திருமாலும், பிற பக்கங்களில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரிய லட்சுமி சன்னதிகள் உள்ளன. முதல் தளத்தில் கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி சன்னதிகளும், இரண்டாம் தளத்தில் தனலட்சுமியும் அமர்ந்து அருள்புரிகின்றனர். பிரகாரங்களில் தசாவதாரம், கமல விநாயகர், குருவாயூரப்பன், ஸ்ரீசக்கரத்தாழ்வார். ஆஞ்சநேயர் மற்றும் தன்வந்திரி மற்றும் இலட்சுமியின் இருநிதிகளான சங்கநிதி, பத்மநிதி ஆகியோர் அருளும் தலமாகும். இத்திருத்தலம் பிரார்த்தனைகள் செலுத்தும் பிரார்த்தனைத் தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
📿🙏

📅 தேதி: 29.10.2025
📍இடம்: சென்னை.

👉 Subscribe பண்ணுங்கள் & Bell ஐ அழுத்தி நேரடி நிகழ்வுக்கு இணைக்கவும்!
👍 Like பண்ணவும், Comment பண்ணி உங்கள் பிரார்த்தனைகளை பகிரவும்.

📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: https://www.facebook.com/thiruvaiyaru.in
🔗 Instagram: https://www.instagram.com/thiruvaiyaru_in
🔗 YouTube: https://www.youtube.com/@Thiruvaiyaru

#2025 #live #devotionallive #thiruvaiyaru #dharumaiadheenam #திருவையாறு #தருமைஆதீனம் #DevotionalLive #Bhakti #TempleFestival #ashtalakshmitemple #besantnagar #ashtalakshmitemple #YagasalaiPoojai #Mahasamprokshanam #சென்னை #காலம்6 #கும்பாபிஷேகம்2025 #அம்மன்விழா #ஆன்மிகவிழா

Related Articles

Back to top button
Close