வருடத்தில் ஒரு முறை… பெட்டிக்குள் அம்மன்? 😲வெளியில் இல்லை… வெளி ஊரில் தான் பூஜை! வினோத ஊர்வலம்!
#thiruvaiyaru #dharumai_adheenam #vadakattalai #thiruvarur #vadakattalai #mariyamman #temple #ammantemple #yearofone #rareevent #mannarkudi #மன்னார்குடி #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர் #வடகட்டளை #ஊர்கூடி #மாரியம்மன்கோவில் #devotional #வருடத்தில்_ஒரு_முறை #பெட்டிக்குள்_அம்மன் #பூஜை #poojai #deeparathanai #yaagam #வடபாதிமங்கலம் #அருணாச்சலேஸ்வரர் #திருவிழா #thiruvizha #potti #amman #yearlyonce #தீபாராதனை #யாகம்
Date : 15.06.2025
Notes:
வருடத்தில் ஒரு முறை… பெட்டிக்குள் அம்மன்?
வெளியில் இல்லை… வெளி ஊரில் தான் பூஜை!
ஊர் மக்கள் தலைமேல் பெட்டியை தூக்கிச் செல்லும் வினோத ஊர்வலம்!
ஏன் இப்படி?
இந்த சுவாரஸ்யமான வரலாறு மற்றும் ஆச்சர்யங்கள் பற்றிய முழு தகவல்களை அறிய காணொளியை முழுமையாக காணுங்கள்.
திருவாரூர் மாவட்டம், வடகட்டளை ஸ்ரீ வடகட்டளை மாரியம்மன் ஆலயம்.
இக்கோவில் திருவாரூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோவில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இந்த மாரியம்மன் பூமியில் இருந்து அசரீரியின் மூலம் வெளிவந்து.தனக்கென ஒரு நியதியை வகுத்தது.
அதில், எல்லா தெய்வங்களை போல இல்லாமல் தனக்கு என கோயில் கட்ட கூடாது என்றும் உரல் உலக்கை சத்தம் இருக்க கூடாது என்றும் எனக்கு எந்த கோவிலும் கட்ட கூடாது என்றும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது பிறந்த மண்ணிற்கு வருவதாக வகுத்துள்ளது.
ஆதலால், இக்கிராம மக்கள் அம்மன் சிலையை வடபாதிமங்கலம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பெட்டியில் வைத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியே எடுத்து புனவாசல் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்திற்கு பெட்டியில் எடுத்து சென்று வழிபாடு செய்து வருகிறனர்.
அதன்படி,வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாரியம்மனை எடுத்து சென்று பத்து நாட்கள் சிறப்பு பூஜை செய்து ஊர்கூடி திருவிழா நடத்தி வருகின்றனர்.
மேலும், வடபாதிமங்கலம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து பித்தலை பெட்டியில் ஒன்றரை அடி உயரம் உள்ள ஐம்பொன்னால் ஆன மாரியம்மன் சிலையை எடுத்துக்கொண்டு பூசங்குடி வழியாக வெள்ளையாற்றை கடந்து வயல்வெளி வழியாக சுமார் 7 கிலோ மீட்டர் நடந்து பெட்டியை ஊர்மக்கள் தலையில் சுமந்து பயணம் செய்து அம்மன் சிலை புனவாசலை அடைந்ததும். அப்பகுதி பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருகின்றனர்.
அதன்பிறகு, அங்கு உள்ள வேப்ப மரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூரையில் அம்மனை வைத்து பத்து நாட்கள் சிறப்பு தீபாராதனை, சிறப்பு பூஜை மற்றும் யாகம் செய்து ஊர்கூடி திருவிழா நடத்தி வருகினர்.
அம்மன் கடந்து செல்லும் பகுதிகளிலும் உள்ள ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகின்றனர்.
அதன் அடிப்படையில் வடகட்டளை மாரியம்மனின் முக்கிய சிறப்புகளாக கண்நோய் குணமாகும், தீராத வியாதியை தீர்க்கும்,வீடு கட்ட விரும்புவோர் 26 முறை சுத்தி வருதல்,கல்யாண வரம் தருவாள், திருமாங்கல்ய பிரார்த்தனை, மண்டகப்படி செய்தால் பல காரியங்களில் மாரிமம்மன் முன்னின்று நடத்தி வைப்பாள் என நம்பிக்கை.
மேலும் இவ்விழாவின் பொழுது, பெட்டியை தலையில் சுமந்தால் நினைக்கும் காரியம் நிச்சயமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை, ராகு கேது தோஷங்கள் விலகும்.
இவ்வாலயத்திற்குஅனைவரும் வந்து ஸ்ரீ வடகட்டளை மாரியம்மனை வணங்கி அனைத்து விதமான நலன்களையும் பெற்றிட வேண்டுகிறோம்.
நன்றி!
📲 Stay Connected with Thiruvaiyaru Channel
🔗 Facebook: / thiruvaiyaru.in
🔗 Instagram: / thiruvaiyaru_in
💬 உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்.
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe செய்து ஆதரிக்கவும்!
🙏 தமிழரின் பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு சேர்க்க நம்மோடு இருங்கள்.




