Videos

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது

திருச்செந்தூர் | ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் | கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது | திருவையாறு

Thiruchendur | Sri Subramaniya Swamy Temple | Kandha Sashti Thiruvizha Yagasalai Poojaiyudan Thodangiyadhu | Thiruvaiyaru

#Thiruchendur #dharumai_adheenam #Subramaniya #Swamy #Aavani #Kodiyettram #thiruvizha #festival #thiruvaiyaru #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருச்செந்தூர் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி #ஆவணி #திருவிழா #கொடியேற்றம்

Date : 02.11.2024

Notes :

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார்.
அதனைத்தொடர்ந்து காலை 07-00 மணிக்கு கோவில் நிர்வாகத்திடம் இருந்து தாம்பூலம் பெறப்பட்டு யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது .

இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும்

வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

மேலும் விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் 21 இடங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி விரதம் இருக்க

தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 7-ம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

Related Articles

Back to top button
Close